கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கினால் இத்தனை நன்மைகளா..?
இரவில் தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணையை வைத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
பகல் முழுவதும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு, இரவில் நிம்மதியாக தூங்குவதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். ஆனால் பல நேரங்களில் முதுகுவலி, மன அழுத்தம், சோர்வு போன்ற காரணங்களால் அவர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குங்கள். அதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
முதுகு வலி நீங்கும்: இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது பெண்களுக்கு முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க பெரிதும் உதவுகிறது.
மாதவிடாய் காலத்தில் ஆறுதல்! பொதுவாகவே, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில், வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். எனவே, இதிலிருந்து, விடுபட நீங்கள் விரும்பினால், உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குங்கள். இதனால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது: கர்ப்பிணிப் பெண்கள் இரவில் நல்ல தூக்கம் தூங்க, ஒரு பக்கமாக சாய்ந்து, கால்களுக்கு இடையில் தலையணை வைத்து தூங்குங்கள். இது உங்களுக்கு வசதியாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வயிற்று நரம்புகளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
இடுப்பு வலி: பெண்களே, இரவில் தூங்கும் போது இடுப்பு வலியால் அவதிப்பட்டால், கால்களுக்கு இடையில் தலையணை வைத்து தூங்குங்கள், இதனால் வலி நீங்கி ஆறுதல் கிடைக்கும்.
களைப்பு நீங்கும்! நாள் முழுவதும் வேலை செய்து, சோர்வால் கை கால்கள் வலித்தால், கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குங்கள், சோர்வு நீங்கி நிம்மதியாக தூங்குவீர்கள்.
நல்ல தூக்கம்! கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்குவது நல்ல தூக்கத்திற்கு உதவும். அதுமட்டுமின்றி, நிம்மதியாக தூங்குவீர்கள். இதனால் காலையில் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
இரத்த ஓட்டம் மேம்படும்: இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கினால் இரத்த ஓட்டம் சீராகும். மேலும் முதுகெலும்பு சீரமைப்பு மேம்படும்.