300 நாளாகியும் விடாமுயற்சி அப்டேட் விடாமல் டிமிக்கி கொடுப்பதா? லைகாவுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வார்னிங்
விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் அமைதி காத்து வரும் லைகா நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் நூதன முறையில் வார்னிங் கொடுத்துள்ளனர்.
vidaamuyarchi
அஜித்தின் 62-வது திரைப்படமான விடாமுயற்சி கடந்த ஆண்டு மே மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அஜித்தின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது. அந்த அப்டேட் வெளியாகி 5 மாதங்களுக்கு பின்னர் தான் அப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினர். கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கியது.
vidaamuyarchi Movie
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கும் இப்படத்தில் ரெஜினா கசெண்ட்ராவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்தது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் எந்த நடிகரிடமும் இல்லாத அளவு சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் தமிழ் ஹீரோ யார் தெரியுமா
Vidaamuyarchi Ajithkumar
வழக்கமாக அஜித் படம் என்றாலே அப்டேட் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த வலிமை, துணிவு போன்ற படங்களின் அப்டேட்டுகளை வாங்க ரசிகர்கள் படாதபாடு பட்டனர். இதே நிலை தான் தற்போது விடாமுயற்சி படத்திற்கும் நிலவி வருகிறது. அப்படத்தின் அப்டேட்டை கடந்த 300 நாட்களாக வெளியிடாமல் உள்ளது லைகா. இதனால் கடுப்பான ரசிகர்கள் அதற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Ajith fans Banner
புதுச்சேரியில் அஜித் நடித்துள்ள வாலி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சிலர் கையில் ஒரு பேனரை கொண்டு வந்திருந்தனர். அந்த பேனரில், விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியிட்டு 300 நாள் ஆச்சு, படத்தோட அப்டேட் என்னாச்சு என எழுதி உள்ளனர். அதுமட்டுமின்றி லைக்காவை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். அந்த பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி.. டாப் நடிகையாக இருந்த ரம்பா சினிமாவில் இருந்து விலகியது ஏன்?