இந்தியாவில் எந்த நடிகரிடமும் இல்லாத அளவு சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் தமிழ் ஹீரோ யார் தெரியுமா
கோலிவுட்டில் ஒரு ஹிட் படங்களை கூட கொடுக்காத நடிகர் ஒருவர், இந்தியாவிலேயே எந்த நடிகரிடமும் இல்லாத அளவு அதிக கார்களை வைத்திருக்கிறார்.
சினிமா நடிகர்கள் என்றாலே ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முன்னணி நடிகர்கள் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து அதன்மூலம் சொகுசு கார்கள், வீடுகள் என வாங்கி வருகின்றனர். அப்படி இந்தியாவில் அதிகளாவிலான சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகர், இதுவரை ஒரு ஹிட் படத்தை கூட கொடுத்ததில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் உண்மை.
அந்த நபர் வேறுயாருமில்லை, நம் தமிழ்நாட்டை சேர்ந்த லெஜண்ட் சரவணன் தான். அவர் தி லெஜண்ட் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் பிளாப் ஆனதை தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர். இவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்கிற ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையிலேயே இவருக்கு பல்வேறு கிளைகள் உள்ளன.
இதையும் படியுங்கள்... காஸ்ட்லியான கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லெஜன்ட் பட நாயகி... விலை ஜஸ்ட் 3 கோடி தான்..!
53 வயதாகும் லெஜண்ட் சரவணன், நடத்தி வரும் மால் மூலம் அவருக்கு கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.2500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம். இப்படி தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டு வரும் லெஜண்ட் சரவணன், எக்கச்சக்கமான சொகுசு கார்களையும் வாங்கு குவித்து வைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்திய சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் யாரிடமும் இல்லாத அளவுக்கு சொகுசு கார்கள் இவரிடம் உள்ளதாம்.
Legend saravanan
இவரிடம் ஆடம்பர கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமே இவரிடம் 3 உள்ளதாம். இதுதவிர, லம்போகினி ஹரகேன், ஃபெராரி 488, பெண்ட்லி காண்டினெண்டல் ஜிடி, ஆஸ்ட்ரன் மார்டின் DB11, லம்போகினி உருஸ், பெண்ட்லி ஃபிளையிங் ஸ்பர், போர்சே 911 டர்போ S உள்ளிட்ட சொகுசு கார்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார் அண்ணாச்சி. இதன் மதிப்பே கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒரு HIT கூட இல்ல.. பிப்ரவரியில் ஜீரோவான தமிழ் சினிமா! ஒரே வாரத்தில் 3 ஹிட்; மலையாள சினிமாவின் அடிபொலி சம்பவம்