திடீரென வானவேடிக்கை காண்பித்த மின் கம்பம்; களேபரமான ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இன்று காலை திடீரென மின் கசிவு ஏற்பட்டு மின் கம்பம் தீப் பற்றி எரிந்ததால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட பேருந்து நிலையத்தில் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மட்டும் இன்றி சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி வந்தனர்.
ரௌடிசம், அட்ராசிட்டி திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட மூவருக்கு மாவுக்கட்டு
மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்துகாக காத்திருந்தனர். அப்பொழுது பேருந்து நிலையத்தில் இருந்த மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து பேருந்து நிலையத்தில் இருந்த ஓட்டுநர்கள் பேருந்துகளை அவசர அவசரமாக எடுத்துச் சென்றனர்.
மேலும் அங்கிருந்த பேருந்து பயணிகளும் தப்பி ஓடினர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்து மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்தில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் சகஜ நிலைக்கு திரும்பியது. இரவு விட்டு விட்டு லேசாக பெய்த மழை காரணமாக மின் கசிவு இருந்திருக்கலாம் எனவும், அதன் மூலம் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.