ரௌடிசம், அட்ராசிட்டி திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட மூவருக்கு மாவுக்கட்டு
திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஜெய் பீம் நகர் மற்றும் சாரன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, நவீன் குமார், ஸ்டீபன் ராஜ் ஆகிய மூன்று பேர் மீதும் தனித்தனியாக கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியில் இவர்கள் அடிக்கடி ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டுவது, ரவுடிசம் செய்வது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
“இயற்கையின் பேரழகு” வனப்பகுதியில் குட்டியுடன் ஹாயாக ஓய்வெடுக்கும் யானை கூட்டம்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஆயுதங்களைக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடி அட்ராசிட்டி செய்துள்ளனர். இதனை அடுத்து திருவண்ணாமலை நகர போலீசார் தனிப்படை அமைத்து பாலாஜி, நவீன் குமார், ஸ்டீபன் ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்ய சென்ற பொழுது காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க தப்பி ஓடி உள்ளனர்.
தேனியில் சாலையோரம் நின்ற காரில் இருந்து 3 சடலங்கள் மீட்பு
அப்பொழுது அவர்கள் தவறி விழுந்ததில் மூன்று பேரில் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கைது செய்த போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 குற்றவாளிக்கும் மாவு கட்டு போட்டு பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.