அஜித்தின் நண்பன்... மருதநாயகத்தில் தொடங்கி விடாமுயற்சியோடு விடைபெற்ற பிரம்மாண்ட கலைஞன்! யார் இந்த மிலன்?
நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனருமான மிலன் இன்று மரணமடைந்த நிலையில், அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
milan, ajith
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். விடாமுயற்சி பட ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் நாட்டில் உள்ள ஓட்டலில் தயாராகிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. மிலனின் மரணத்தால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வந்த மிலனுக்கு சினிமாவில் குருவாக இருந்தவர் சாபு சிரில். அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றபோது கமலின் மருதநாயகம் படத்துக்கான ஆலோசனையில் இருந்தாராம் சாபு சிரில். அப்போது அதற்கு மிலன் கொடுத்த சில ஐடியாக்கள் சாபி சிரிலுக்கு பிடித்துப்போக, அவர் மிலனை தன்னிடம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.
Art director milan
பின்னர் அவருடன் தொடர்ந்து 22 படங்கள் பணியாற்றி உள்ளார் மிலன். கடைசியாக சாபு சிரிலின் உதவியாளராக அவர் பணியாற்றிய படம் அந்நியன். கிட்டத்தட்ட அப்படத்தில் தன்னை ஒரு கலை இயக்குனர் போல சாபு சிரில் பணியாற்ற வைத்ததாக மிலனே பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையடுத்து ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாப காதலன் படம் தான் மிலன் முதன்முதலில் கலை இயக்குனராக பணியாற்றிய படம். இவர் ஆரம்ப காலகட்டத்தில் அஜித்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அசோகா படத்தின் போது தான் அஜித்தை முதன்முதலில் சந்தித்துள்ளார் மிலன். பின்னர் சிட்டிசன், வில்லன், ரெட் என தொடர்ந்து அவருடன் பணியாற்றியபோது, ஷூட்டிங் இல்லாத சமயங்களில் மிலன் உடன் நேரத்தை செலவிடுவாராம் அஜித்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
milan passed away
பின்னர் மிலன் கலை இயக்குனர் ஆனதும் அவருக்கு முதன்முதலில் கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு பில்லா திரைப்படம். அப்படத்தில் தன்னுடைய பிரம்மாண்ட செட்களால் பிரம்மிப்பூட்டிய மிலனை அஜித் வியந்து பாராட்டியதோடு, அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளார். சமீபத்தில் வெளியான துணிவு மற்றும் தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி வரை அஜித்துடன் மட்டுமே 9 படங்களில் பணியாற்றி இருக்கிறார் மிலன்.
அதேபோல் அஜித்தின் மனைவி ஷாலினிக்கும் மிலனின் செட் ஒர்க் மிகவும் பிடிக்குமாம். துணிவு, விவேகம் உள்ளிட்ட படங்களுக்கு செட் அமைத்தபோது அதை நேரில் வந்து பார்த்து மிலனை வியந்து பாராட்டினாராம் ஷாலினி.
milan, suriya
அதேபோல் விவேகம் படத்திற்காக மிலன் போட்ட கண்ட்ரோல் ரூம் செட்டை பார்த்து அஜித்தே பிரம்மித்துபோனாராம். இப்படி அஜித்தின் நெருங்கிய நண்பனாக இருந்த மிலன், அவர் அருகிலேயே உயிரைவிட்டுள்ளது அஜித்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விடாமுயற்சி மட்டுமின்றி சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்திற்கும் மிலன் தான் கலை இயக்குனராக பணியாற்றி வந்தார். அவரின் திடீர் மறைவு கங்குவா படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மிலனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இரு மகன்களில் ஒருவர் 2-ம் வகுப்பும் மற்றொருவர் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கலை இயக்குனர் மிலன் மரணம்... அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சோகம்