கலை இயக்குனர் மிலன் மரணம்... அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சோகம்
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குனர் மிலன் அங்கு திடீரென உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ajith, Milan
சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவர் மிலன். சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்றிய சிட்டிசன், தமிழன், ரெட், அந்நியன் போன்ற படங்களில் மிலன் அவரின் உதவியாளராக பணியாற்றினார். இதையடுத்து ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கலாப காதலன் படம் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார் மிலன். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய மிலனுக்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு கிடைத்தது.
vidaamuyarchi art director Milan
அதன்படி அஜித்தின் பில்லா படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய மிலனின் பணிகள் அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து தான் நடித்த ஏகன், வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்களிலும் அவருக்கே வாய்ப்பளித்தார் அஜித். தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்கு கூட மிலன் தான் கலை இயக்குனராக பணியாற்றி வந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Milan with ajith and siruthai siva
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித், நடிகை திரிஷா, இயக்குனர் மகிழ் திருமேனி உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்று அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். கலை இயக்குனர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார்.
art director Milan
இந்நிலையில், இன்று காலை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கலை இயக்குனர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை படக்குழுவினர் மருத்துவமனை அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அஜித் உள்பட விடாமுயற்சி படக்குழுவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவன், கூல் சுரேஷ் உடன் கூட்டணி... சைலண்டாக உருவாகும் சந்தானத்தின் பிரம்மாண்ட படம்