MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தேர் திருவிழா’ கொண்டாட ரெடியா? சர்ப்ரைஸாக வந்த லால் சலாம் பட பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தேர் திருவிழா’ கொண்டாட ரெடியா? சர்ப்ரைஸாக வந்த லால் சலாம் பட பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 17 2023, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lal Salaam movie

Lal Salaam movie

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதுவரை 2 படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா, தற்போது தனது மூன்றாவது படமான லால் சலாம் பட வேலைகளில் பிசியாக உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

24
lal salaam pongal release

lal salaam pongal release

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனால் லால் சலாம் படத்துக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார் ரஜினி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Lal salaam Rajinikanth

Lal salaam Rajinikanth

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான ரிலீஸ் வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த டிசம்பர் 12-ந் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

44
lal salaam First single update

lal salaam First single update

இந்நிலையில், தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி லால் சலாம் படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் தேர் திருவிழா என தொடங்கும் இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என புத்தம் புது போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... எண்ணூர் ஆயில் கசிவு... பிக்பாஸில் பேசிய கையோடு நேரடியாக களத்தில் இறங்கிய கமல்ஹாசன்- படகில் சென்று திடீர் ஆய்வு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved