எண்ணூர் ஆயில் கசிவு... பிக்பாஸில் பேசிய கையோடு நேரடியாக களத்தில் இறங்கிய கமல்ஹாசன்- படகில் சென்று திடீர் ஆய்வு
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆயில் படிந்துள்ள இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் படகில் சென்று ஆய்வு செய்தார்.
வடசென்னை திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த ஆயில் கழிவுகள் முகத்துவாரம் பகுதி முழுவதும் படர்ந்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. தமிழக அரசு முகத்துவாரம் பகுதியில் படர்ந்து உள்ள ஆயிலை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இந்த பிரச்சனை குறித்து பேசினார். மேலும் எண்ணூர் ஆயில் கசிவு பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் விளைவுகளையும் அதற்கு ஏன் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த இன்று களத்துக்கே சென்று நேரடியாக ஆய்வும் மேற்கொண்டு இருக்கிறார் கமல்ஹாசன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து படகில் முகத்துவாரம் வரை சென்று ஆயில் படிந்த பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டார். அவருடன் சமூக ஆர்வலர் சீனிவாசன், மீனவ சங்க நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ் பி மோகன், துணைச் செயலாளர் கவுஸ் பாஷா ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் மீனவர் சங்க நிர்வாகிகளிடம் குறைகளையும் பாதிப்புகளையும் கேட்டு அறிந்தார் கமல்ஹாசன்.
இதையும் படியுங்கள்... அடுத்த 5 வருஷத்துக்கு கால்ஷீட் இல்ல... தனுஷ் அம்புட்டு பிசி..! அவர் கைவசம் இத்தனை படங்களா? முழு லிஸ்ட் இதோ