MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sheela: திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்! விவாகரத்தி அறிவித்த நடிகை ஷீலா.. இவரின் கணவர் இந்த பிரபலமா?

Sheela: திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்! விவாகரத்தி அறிவித்த நடிகை ஷீலா.. இவரின் கணவர் இந்த பிரபலமா?

திரௌபதி, மண்டேலா, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை ஷீலா தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 02 2023, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சமீப காலமாக திரையுலகில்... தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பலர் கால்பதித்து வருகிறார்கள். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டதில் பிறந்து வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளவர் ஷீலா ராஜ்குமார். 

26

பரதநாட்டிய கலைஞரான ஷீலா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால்... கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றார். இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பல குறும்படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

விக்கி இயக்கும் படத்தில் பிரதீபுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! அட இது தான் டைட்டிலா? வெளியே கசிந்த தகவல்!

36

இதைதொடந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியான 'ஆறாது சினம்' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு டூலெட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். டூலெட்  படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை குவித்தது. எனவே அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷீலாவுக்கு கிடைத்தது.

46

ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான, 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்து கொண்டே... திரைப்படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, திரௌபதி, மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டும் இன்றி, மலையாளத்தில் இவர் நடித்து வெளியான கும்பலாங்கி நைட்ஸ் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

நடிகை ஷீலா, நாளைய இயக்குனர் குறும்படங்களில் நடித்த போது... அதில் கலந்து கொண்டு பிரபலமான இயக்குனர் சோழன் வாலறிவன் என்பவரை காதலித்து வந்தநிலையில், இவர்களின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், குடும்பத்தினரை மீறி நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

66

இந்த ஜோடிக்கு 2020 -ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஷீலாவுக்கும் அவரது காதல் கணவர் சோழனுக்கும் இவருக்கும்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தகவலை ஷீலா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில், உறுதி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர்... திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் என கூறி நன்றியும்... அன்பும் என தன்னுடைய கணவர் சோழனை டேக் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Bigg Boss Eviction: போட்ட பிளான் சொதப்பிடுச்சு! இந்த வாரம் பிக்பாசில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved