MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விக்கி இயக்கும் படத்தில் பிரதீபுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! அட இது தான் டைட்டிலா? வெளியே கசிந்த தகவல்!

விக்கி இயக்கும் படத்தில் பிரதீபுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! அட இது தான் டைட்டிலா? வெளியே கசிந்த தகவல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 02 2023, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Director Pradeep Ranganathan

Director Pradeep Ranganathan

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான, 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட... விபத்தில் சிக்கி கோமாவிற்கு போகும் ஜெயம் ரவி, பல வருடங்கள் கழித்து சுயநினைவுக்கு வருகிறார். பின்னர் 90'ஸ் கிட்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது, 2'கே கிட்ஸ் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை காமெடி கலந்த கதைக்களத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம், தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் பிரதீப்.
 

26
comali

comali

'கோமாளி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் களமிறங்கினார். 'லவ் டுடே' படத்தை இயக்கி... நடித்த நிலையில், இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனை பலர் ஹீரோவாக நடிக்க வைக்க முயன்றனர்.

Jigarthanda OTT: தீபாவளி சரவெடியாக வெளியான... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

36

ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு, 20 கோடிக்கு மேல் பிரதீப் சம்பளம் கேட்பதால்... இவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியை பல இயக்குனர்கள் கைவிட்ட நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள, படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

46
vignesh shivan, kamal

vignesh shivan, kamal

முதலில் இவர் நடிக்க இருந்த படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்த நிலையில்... பட்ஜெட் அதிகம் இப்படத்தை தயாரிக்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கியது. இதை தொடர்ந்து இப்படத்தை, 'லியோ' படத்தை தயாரித்த, 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Bigg Boss Eviction: போட்ட பிளான் சொதப்பிடுச்சு! இந்த வாரம் பிக்பாசில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
 

56
Pradeep Ranganathan

Pradeep Ranganathan

இப்படத்தி படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது படம் குறித்த சில அப்டேட் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, பாலிவுட் திரையுலகை சேர்ந்த இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு LIC  என தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. LIC என்பது (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்பதின் சுருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66

ஏற்கனவே இப்படம் குறித்து சமீபத்தில் வெளியான தகவலில், இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கின் , எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நயன்தாரா... பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்... இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன்
அனிருத் ரவிச்சந்தர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved