MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shalini: இவங்க பேமிலில யாருக்குமே வயசாகாதா? அன்றும்; இன்றும் அதே இளமையோடு இருக்கும் நடிகை ஷாலினியின் குடும்பம்

Shalini: இவங்க பேமிலில யாருக்குமே வயசாகாதா? அன்றும்; இன்றும் அதே இளமையோடு இருக்கும் நடிகை ஷாலினியின் குடும்பம்

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தன்னுடைய தாயின் பிறந்தநாளன்று வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 15 2024, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shalini Family

Shalini Family

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர். கடந்த 1997-ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ஷாலினி. நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து நடிகை ஷாலினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் தமிழைக் காட்டிலும் மலையாளத்தில் தான் அதிக படத்தில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ajith, shalini

Ajith, shalini

தமிழில் வெறும் ஐந்து படங்களில் மட்டுமே நடித்த ஷாலினி அத்துடன் சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதில் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது சரண் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு அவர் நடித்த அமர்க்களம் திரைப்படம் தான். இப்படத்தின் மூலம் தான் நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படம் ரிலீஸ் ஆன அடுத்த ஆண்டு அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... Vishal about Varalaxmi : வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றிய கேள்வி; ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பதிலளித்த விஷால்

34
Shalini, Richard Rishi, Shamlee

Shalini, Richard Rishi, Shamlee

திருமணத்துக்கு பின்னர் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்த ஷாலினி, அதன்பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. நடிகை ஷாலினிக்கு ரிச்சர்டு ரிஷி என்கிற சகோதரரும், ஷாமிலி என்கிற தங்கையும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். ரிச்சர்டு ரிஷி திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல் ஷாமிலி, வீர சிவாஜி என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

44
Shalini Family old vs new photo

Shalini Family old vs new photo

இந்த நிலையில், நடிகை ஷாலினி அவரது தங்கை ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்டு ரிஷி உடன் சேர்ந்து தனது தாயாரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது தாயாருடன் பேமிலியாக எடுத்த புகைப்படத்தையும், அவர்களுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றையும் ஒப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இதில் நடிகை ஷாலினியின் தாயார் உள்பட அனைவருமே குறையாத இளைமையுடன் அப்படியே இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் உங்க பேமிலிக்கே வயசாகாதா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Lokesh : தலைவர் 171.. இணையும் வாரிசு நடிகை மற்றும் மூத்த நடிகர்? தயார் நிலையில் டீசர் - லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved