ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், முன்னணி தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Naga Chaitanya
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த ஜோஷ் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து கவுதம் மேனனின் மாஸ்டர் பீஸ் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நாக சைதன்யா. இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார்.
samantha, naga chaitanya
இதையடுத்து மனம், மஜிலி போன்ற படங்களில் நடித்தபோது நடிகை சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கு இடையே காதல் மலர்ந்தது. இப்படங்கள் வெற்றியடைந்ததை போல் இவர்களது காதலும் சக்சஸ் ஆகி, கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர்.
samantha ex husband naga chaitanya
நான்கு ஆண்டுகள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தாங்கள் விவாகரத்து செய்து பிரிவதாக இருவருமே ஒன்றாக அறிவித்தனர். சமந்தாவை பிரிந்த பின்னர் லால் சிங் சத்தா என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார் நாக சைதன்யா. ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
naga chaitanya father nagarjuna
நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழ்ந்து வரும் அவரது மகன் நாக சைதன்யாவுக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது. அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.154 கோடி என கூறப்படுகிறது.
Naga chaitanya net worth
முன்பெல்லாம் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நாக சைதன்யா, பாலிவுட்டில் அறிமுகமான பின்னர் தன் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திவிட்டாராம். அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் நாக சைதன்யா சினிமாவை தாண்டி பிசினஸிலும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். இவர் ஷொயு என்கிற கிளவுடு கிச்சன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
Naga chaitanya car collection
இவர் மிகப்பெரிய கார் வெறியர் என்று தான் சொல்ல வேண்டும். இவரிடம் ரூ.1.75 கோடி மதிப்புள்ள ஃபெராரி F430 போன்ற ரேஸ் கார்கள் முதல் ரூ.3.43 கோடி மதிப்புள்ள ரேஞ் ரோவர் போன்ற சொகுசு கார்கள் வரை எக்கச்சக்கமான கார் கலெக்ஷன் உள்ளன. இதுதவிர பிஎம்டபிள்யூ R9T, டிரயம்ப் போன்ற சூப்பர்பைக்குகளையும் வாங்கி ஓட்டி வருகிறார் நாக சைதன்யா. அண்மையில் ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் சொகுசு வீடு ஒன்றையும் விலைக்கு வாங்கி இருந்தார் நாக சைதன்யா. அதன் மதிப்பு ரூ.27 கோடி என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... IMDB தரவரிசை பட்டியலில் விஜய், அஜித்துக்கு இடமில்லை! நயன், விஜய் சேதுபதி என டாப் 10ல் இடம்பிடித்தவர்கள் லிஸ்ட்