MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ramya Pandian : ஜாலியாக ஒரு ஹோலி கொண்டாட்டம்... கண்ணைக்கவரும் ரம்யா பாண்டியனின் கலர்ஃபுல் போட்டோஸ் இதோ

Ramya Pandian : ஜாலியாக ஒரு ஹோலி கொண்டாட்டம்... கண்ணைக்கவரும் ரம்யா பாண்டியனின் கலர்ஃபுல் போட்டோஸ் இதோ

டிரெண்டிங் நாயகியாக வலம்  வரும் ரம்யா பாண்டியன், வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை கொண்டாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 24 2024, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

28

பின்னர் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகைகள் வழக்கமாக பாலோ பண்ணும் யுக்தியான கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தினார் ரம்யா பாண்டியன். அதில் கொஞ்சம் வித்தியாசமாக மொட்டை மாடியில் காட்டன் சேலையில் கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார்.

38

ரம்யா பாண்டியனின் மொட்டைமாடி போட்டோஷூட் அவரை பாப்புலர் ஆக்கியது. இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு வராவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரம்யா.

48

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்திய ரம்யா பாண்டியன் பைனல் வரை சென்றாலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற அவருக்கு பின்னர் பிக்பாஸ் எனும் பிளாக்பஸ்டர் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... Kamal : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ... ஒற்றைக்காலில் நின்றபடி ஒன்றாக போஸ் கொடுத்த கமல் - சுந்தரம் மாஸ்டர்

58

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், அதில் இறுதிப்போட்டிவரை முன்னேறினாலும் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.

68

அந்த வகையில், கோலிவுட்டில் சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

78

அந்த வகையில், தற்போது ஹோலி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற லெஹங்கா உடை அணிந்து, கையில் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.

88

ரம்யா பாண்டியனின் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளன.

இதையும் படியுங்கள்... மதுரையில் தடபுடலாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகள் திருமணம்... தாய்மாமனை கரம்பிடித்தார் இந்திரஜா...!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved