MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kamal : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ... ஒற்றைக்காலில் நின்றபடி ஒன்றாக போஸ் கொடுத்த கமல் - சுந்தரம் மாஸ்டர்

Kamal : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ... ஒற்றைக்காலில் நின்றபடி ஒன்றாக போஸ் கொடுத்த கமல் - சுந்தரம் மாஸ்டர்

கமல்ஹாசனும், டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் ஒன்றாக ஒற்றைக்காலில் நின்றபடி போஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சிறுவயதில் இருந்து நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் மெனக்கெட்டுள்ளார். இவரின் படங்களில் புதுமைக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு படத்திலும் தன்னை அப்கிரேடு செய்துகொண்டே இருக்கும் காரணத்தால் தான் இன்றைக்கும் டாப் ஹீரோவாக நீடித்து வருகிறார் கமல்ஹாசன்.

24

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 48 போன்ற திரைப்படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். அந்நிறுவனம் தயாரித்துள்ள இனிமேல் எனும் ஆல்பம் பாடலும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... மதுரையில் தடபுடலாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகள் திருமணம்... தாய்மாமனை கரம்பிடித்தார் இந்திரஜா...!

34

இந்த நிலையில், கமல்ஹாசனை வைத்து மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ராஜபார்வை, போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் தான் சிங்கீதம் ஸ்ரீனிவாஸ். அவரை கொண்டாடும் வகையில் அண்மையில் நடிகர் கமல்ஹாசன் அபூர்வ சிங்கீதம் என்கிற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் மணிரத்னம், வைரமுத்து உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

44
kamalhaasan

kamalhaasan

அந்த வகையில் அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் வந்திருந்தார். அப்போது நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததும் அவருடன் சேர்ந்து ஒற்றக்காலில் நின்றபடி மகிழ்ச்சி பொங்க போட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டார். கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுகூறும் வகையில் அவர்கள் இருவரும் இவ்வாறு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சென்னையில் ரசிகர்களுடன் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்து Vibe ஆன எம்.எஸ்.தோனி - வைரலாகும் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved