சாரங்கா கோஷம் விண்ணை பிளக்க 3 மணி நேரம் போராடி தேரை மீட்ட பக்தர்கள்; கும்பகோணத்தில் பரபரப்பு சம்பவம்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலின் சித்திரை தேர், இராமசாமி கோவில் அருகே வந்தபோது தேரின் முன் பக்க சக்கரங்களில் ஒன்று இரண்டடி ஆழத்திற்கு மண்ணில் புதைந்த நிலையில், தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி இயந்திர உதவியுடன் மீட்டனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய கோவில் தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தின் சித்திரை தேர் திருவிழா இன்று காலை துவங்கியது. இன்று பகல் 10.30 மணி அளவில் தேர் இராமசுவாமி கோவில் அருகே வந்தபோது தேரின் முன் பக்க சக்கரங்களில் ஒன்று இரண்டடி ஆழத்திற்கு மண்ணில் புதைந்தது. முன்னேற்பாடாக கிரேன் தேரின் அருகிலேயே இருந்ததால் தேர் மேலும் கீழே இறங்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
உடனடியாக இரும்பு தகடுகள் கொண்டுவரப்பட்டு தேர்க்கு முட்டுக் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிரேன் மற்றும் ஜாக்கிகள் உதவியுடன் தேர் சக்கரத்தினை மேலே தூக்கும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். தேர்சக்கரம் மண்ணில் புதைந்ததால் தேரோட்டம் சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
சேலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரழப்பு; இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
தேர் சக்கரம் மண்ணில் புதைந்த இடத்தில் உருவான பள்ளத்தை கருங்கல், ஜல்லி, சிமெண்ட் கொண்டு அடைக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இந்த பள்ளத்தில் தண்ணீர் அடித்து சரி செய்த பின்னர் இரும்புசீட்டுகள் வைத்து ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் தேரின் உயிரை பொறுமையாக இறக்கி பின்னர் ஜேசிபி கிரேன் உதவியுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டது.
VAO Suicide: திருமணமாகாத விரக்தியில் VAO தற்கொலை? கோவையில் பரபரப்பு
தேரின் வடத்தை பிடித்த பக்தர்கள் சாரங்கா சாரங்கா என கோஷமிட்டவாரு தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றனர். மண்ணுக்குள் புதைந்த தேரின் சக்கரத்தை லாவமாக மேலே எடுத்து ஓட்டிய தேரோட்டிகளுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரிய துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இந்த பணி நிறைவடைந்தது.