ஹீரோயின் ஆன பின் குட்டி நயன் அனிகா சுரேந்திரன் கொண்டாடிய முதல் பிறந்தநாள்... அதுவும் யார் கூட தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
anikha surendran
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா. இப்படத்தில் அஜித்துக்கும் அனிகாவுக்கும் இடையேயான தந்தை - மகள் பாசம் ஹைலைட்டாக அமைந்ததால் படமும் வெற்றி பெற்றது.
Kutty Nayan anikha
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நானும் ரெளடி தான் படத்தில் நடிகை நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரமாக நடித்திருந்தார் அனிகா. இப்படத்தை தொடர்ந்து அஜித் - நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின் மகளாக அனிகா நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாராவின் மகள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதால் ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி நயன் என அழைக்க தொடங்கினர்.
anikha surendran Birthday
விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அனிகாவுக்கு ஹீரோயின் ஆசை வந்துவிட்டது. இதையடுத்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ஹீரோயின் சான்ஸ் தேடி வந்த அவரை முதன்முதலில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தது தெலுங்கு சினிமா தான். தெலுங்கில் உருவான புட்ட பொம்மா என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அனிகா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
anikha surendran 19th Birthday
இதையடுத்து ஓ மை டார்லிங் என்கிற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார் அனிகா. அப்படத்தில் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். அவர் ஹீரோயினாக நடித்த இரண்டு படங்களும் எடுபடாததால், ஹீரோயினாக நடிப்பதை நிறுத்திவிட்டு, முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார்.
anikha surendran mother
தற்போது தமிழில் ஹிப்ஹாப் தமிழாவின் PT சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷ் இயக்கும் டி50 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அனிகா நேற்று தனது 19-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதுவும் தனக்கு மிகவும் பிடித்த தனது தாய் உடன் தான் இந்த 19-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அனிகா. ஹீரோயின் ஆன பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தலைவரா.. தளபதியா! 2023ல் அதிகவசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்