ரஜினியோட எனக்கு ரகசிய திருமணம்னு தெரிஞ்சதும் கோலிவுட்டே ஷாக் ஆகிட்டாங்க - பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை
நடிகர் ரஜினிகாந்தை தான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது குறித்து நடிகை கவிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
kavitha, Rajinikanth
தமிழ் திரையுலகில் 11 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக நடித்தவர் கவிதா. இவர் ரஜினி, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் செந்தமிழ் பாட்டு, வைதேகி கல்யாணம், பாண்டவர் பூமி உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழைக்காட்டிலும் தெலுங்கில் 300 படங்களுக்கு மேல் நடித்து டோலிவுட்டில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தார் கவிதா.
Actress Kavitha
சினிமாவில் வில்லி, மாமியார் மற்றும் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வந்த கவிதா, சின்னத்திரை சீரியல்களிலும் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்த கவிதா, அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த கவிதாவின் வாழ்க்கை கொரோனா காலகட்டத்தில் தலைகீழாக மாறியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Kavitha about gossip
அந்த சமயத்தில் கவிதாவிற்கு பக்கபலமாக இருந்த அவரது மகன் மற்றும் கணவர் இருவரும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர். இதையடுத்து மூன்றுமுறை தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார் கவிதா. பின்னர் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் கவிதா, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது ரஜினியுடனான கிசுகிசு பற்றி மனம்திறந்து பேசினார்.
kavith about Rumoured secret marriage with rajinikanth
ரஜினியுடன் கவிதா தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமயத்தில், அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மோகன்பாபு உடன் ஒரு படத்தில் நடித்து வந்தபோது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. அவர் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என விட்டுவிட்டாராம். ஆனால் மோகன்பாபு இதைக்கேட்டு கடுப்பாகி, இது கவிதாவின் கெரியரை பாதிக்கும் என்பதால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கவிதாவை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்துக்கே சென்று சண்டை போட்டாராம். பின்னர் அதற்கு மறுப்பு செய்தி போடுவதாக அந்த பத்திரிகை நிறுவனம் கூறி பின்னரே அந்த வதந்தி முடிவுக்கு வந்ததாம். அந்த சமயத்தில் ரஜினியோட எனக்கு கல்யாணம் ஆனதாக காட்டுத்தீ போல் செய்தி பரவியது என்று கவிதா கூறினார்.
இதையும் படியுங்கள்... தளபதியின் குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா? லியோ சக்சஸ் மீட் நடத்த அனுமதி அளித்தது காவல்துறை... ஆனா ஒரு கண்டிஷன்