தளபதியின் குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா? லியோ சக்சஸ் மீட் நடத்த அனுமதி அளித்தது காவல்துறை... ஆனா ஒரு கண்டிஷன்
லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
Thalapathy vijay
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் எல்சியு-வில் இருந்ததால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இல்லை என்கிற கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து உள்ளது.
Leo vijay
இதற்கு முக்கிய காரணம் பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி லியோ பட ரிலீசுக்கு பின்னர் அதன் கதையில் உள்ள டுவிஸ்ட்டுகளும் ஒவ்வொன்றாக தெரியவருவதால் படம் குறித்து சோசியல் மீடியாவிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. லியோ படம் ரிலீசாகும் முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அதில் ஒன்று தான் இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo success meet
லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் அந்த விழாவுக்கு அதிகப்படியான போலி டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் வேறுவழியின்றி அந்த விழாவை ரத்து செய்தனர். அதற்கு சின நாட்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் முன் எச்சரிக்கை கருதி இந்த முடிவை படக்குழு எடுத்தது.
Leo success meet update
இசை வெளியீட்டு விழா நடத்த முடியாமல் போன அதே இடத்தில் தற்போது அப்படத்தின் வெற்றிவிழாவை நடத்த உள்ளது லியோ படக்குழு. இதற்காக தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நவம்பர் 1-ந் தேதி அந்த சக்சஸ் மீட்டை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி உள்ள காவல்துறை, 200 முதல் 300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பேருந்தில் ரசிகர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... லியோவுக்கு முந்தைய படங்கள் விஜய்க்கு மாஸ் வெற்றியை கொடுத்ததா?- தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ஓர் அலசல்