MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்கிறாரா அபிஷேக் பச்சன்? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம் வைரல்!

Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்கிறாரா அபிஷேக் பச்சன்? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதாக மீண்டும் ஒரு தகவல் பாலிவுட் திரையுலகில் வட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த முறை அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்று வெளியாகி சந்தேகத்தை தூண்டி விட்டுள்ளது.  

2 Min read
manimegalai a
Published : Dec 05 2023, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்... பழம்பெரும் நடிகர் அமிதாப்  பச்சனின் ஒரே மகனான, அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தூம் 2 படத்தில் நடிக்கும் போது இவர்கள் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2007-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

27

இந்த நட்சத்திர ஜோடிக்கு ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர்களை பற்றி அடிக்கடி விவாகரத்து சர்ச்சை எழுவதும், ஓய்வதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் ஐஸ்வர்யா நடித்து வந்த நிலையில்... இது போன்ற வீண் வதந்தி தொடர்ந்து பரவியதன் காரணமாகவே ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இருந்து ஒதுங்கியதாக சில பேச்சுகளும் அடிபட்டது.

வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் - அமீர் கான்! ஓடி வந்து உதவிய அஜித்! புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!
 

37

ஆனால் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்தார். அவர் கூறியது போலவே... பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பல்வேறு ஃபேஷன் நிகழ்ச்சிகளில் தன்னுடைய கணவருடன் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

47

இந்நிலையில் பாலிவுட் பயில்வான் ரங்கநாதனாக இருக்கும்... உமர் சந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பேசியுள்ளது மட்டும் இன்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. 

தென்னிந்திய திரைப்படங்களில்.. கோடிகளில் சொத்து சேர்த்து வைத்துள்ள டாப் 5 வில்லன் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

57

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று, உமர் சந்து  ட்வீட் செய்துள்ளார். இது தவிர, சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் வதந்திகளும் உள்ளன. 

67

இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும், அவர்கள் பிரிந்து செல்ல தயாராகி வருவதாகவும் கூறுகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. தற்போது அபிஷேக் பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

அதே நேரம் இது உண்மையான தகவல் இல்லை எனக் கூறப்படுகிறது. கையில் மோதிரம் இல்லை என்றால் விவாகரத்து என்று அர்த்தமா என ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். எந்த ஒரு சர்ச்சைக்கும் விளக்கம் கொடுக்கும் அபிஷேக் இதற்கும் விரைவில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kanaka: முதலமைச்சர் ஆசை.. பிரபலத்திற்கு கனகாவை ரகசிய திருமணம் செய்துவைத்த தேவிகா? புது குண்டை போட்ட பயில்வான்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அபிஷேக் பச்சன்
பாலிவுட்
ஐஸ்வர்யா ராய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved