MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kanaka: முதலமைச்சர் ஆசை.. பிரபலத்திற்கு கனகாவை ரகசிய திருமணம் செய்துவைத்த தேவிகா? புது குண்டை போட்ட பயில்வான்!

Kanaka: முதலமைச்சர் ஆசை.. பிரபலத்திற்கு கனகாவை ரகசிய திருமணம் செய்துவைத்த தேவிகா? புது குண்டை போட்ட பயில்வான்!

முதலமைச்சர் ஆசையில் இருந்த பிரபலத்திற்கு, தன்னுடைய மகள் கனகாவை தேவிகா ரகசிய திருமணம் செய்து வைத்ததாக... பேச்சு ஒன்று அடிபட்டது என்று புது குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

2 Min read
manimegalai a
Published : Dec 05 2023, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனகாவை அவருடைய தாயார் தேவிகா, பிரபல நடிகருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்ததாக ஒரு தகவல் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28

நடிகை கனகாவின் தாயார் தேவிகா, எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்டி ராமராவ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக என் டி ராமராவ் ஜோடியாக சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Jyothika: 45 வயதிலும் 18 வயது ஹீரோயின் போல் இருக்கும் ஜோதிகா! கோட்.. சூட்டில்.. எடுத்து கொண்ட கியூட் போட்டோஸ்!

38

திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும், தன்னுடைய மகள் பிறந்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். இவரின் ஒரே மகளான கனகா... இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். கனகா ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் தான் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கிய, பின்னர் எதிர்பாராத விதமாக ஹீரோயினாக மாறினார்.

48

கரகாட்டக்காரன் படத்தின் வெற்றி கனகாவை முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது. இதை தொடர்ந்து, தங்கமான ராசாவே, சீதா, பெரிய இடத்து பிள்ளை, அதிசய பிறவி, துர்கா, எங்க ஊரு ஆட்டுக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

Vijay Tv Serial: அட கடவுளே.. புயலில் கூட சீரியல் ஷூட்டிங்! விஜய் டிவி தொடரின் அலப்பறை! வீடியோ வெளியிட்ட நடிகை!

58
Actress Kanaka

Actress Kanaka

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் விரலுக்கேத்த வீக்கம் திரைப்படம் வெளியானது. அதே போல் Ee Mazha Then Mazha என்கிற மலையாள படத்திலும் நடித்திருந்தார். ஏற்கனவே தன்னுடைய அம்மாவின் இறப்புக்கு பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கனகா... இப்படி தன்னை தானே, தனிமைப்படுத்தி கொள்ள காரணம், காதல் தோல்வி மற்றும் தன்னுடைய தந்தை தேவதாஸுடன் ஏற்பட்ட பிரச்சனை என கூறப்பட்டது.
 

68

ஒருவழியாக இவரின் சொத்து பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக... கனகாவை சமீபத்தில் சந்தித்து பேசிய குட்டி பத்மினி தெரிவித்த நிலையில், பல மணி நேரம் அவரை சந்தித்து பேசியது மட்டும் இன்றி விரைவில் அவருடன், பேட்டி ஒன்றை எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

78

இது ஒருபுறம் இருக்க தற்போது கனகாவின் ரகசிய திருமணம் பற்றி பேசி புதிய குண்டை போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். என்.டி.ராமாராவின் நெருங்கிய தோழியான தேவிகாவை சந்தித்து அவர் பேசியபோது, முதலமைச்சராக ஆகவேண்டும் என்றால், குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதாகவும், இதை தொடர்ந்து தொடர்ந்து தேவிகா, தன்னுடைய மகள் கனகா அதே ராசி - நட்சத்திரத்தில் பிறந்தவர் என கூறி திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.
 

88

இந்த திருமணத்தால் கனகா மன உளைச்சலுக்கு ஆளாதனாக கூறியுள்ள பயில்வான்... திருமணம் முடிந்ததோடு சரி சரி, அதற்க்கு மேல் எதுவும் நடக்கவில்லை. இந்த திருமணத்திற்காக அதிக பணம் தேவிகாவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதியானது என்று பயில்வான் கூறாத நிலையில்... இப்படி ஒரு பேச்சு அடிபட்டதாகவே தெரிவித்துள்ளார்.

Jahnvi Net Worth: 5 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்! வீடு, கார், பேங்க்பேலன்ஸ் விவரம்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved