MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெள்ளத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த ரசிகர்கள்... நேரில் அழைத்து தடபுடலாக விருந்து வைத்த சூர்யா - போட்டோஸ் இதோ

வெள்ளத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த ரசிகர்கள்... நேரில் அழைத்து தடபுடலாக விருந்து வைத்த சூர்யா - போட்டோஸ் இதோ

வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பின் போது மக்களுக்கு உதவிய ரசிகர்களை நேரில் அழைத்து நடிகர் சூர்யா தடபுடலாக விருந்து வைத்து பாராட்டி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
suriya

suriya

நடிகர் சூர்யா சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே செயல்பட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயின்றி இன்று டாக்டர், இன்ஜினியர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் விதமாக சூர்யா குடும்பத்தினர் உழவன் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

24
suriya fans

suriya fans

சமூக நலப்பணிகளைப் போல் ரசிகர்கள் மீதும் தீரா காதல் கொண்டிருப்பவர் சூர்யா, அவர்களின் செயல்களை கூர்ந்து கவனித்து வரும் சூர்யா, அவர்களுக்கு ஏதேனும் ஆனால் முதல் ஆளாக ஓடோடி வந்துவிடுவார். சமீபத்தில் கூட விபத்தில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய ரசிகர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அக்குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துவிட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ

34
suriya fans meet

suriya fans meet

இப்படி ரசிகர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் சூர்யா, நேற்று தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு விருந்தளித்து உள்ளார். கடந்த ஆண்டு தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ள காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களை கவுரவித்து விருந்தும் கொடுத்துள்ளார். அதேபோல் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலின் போது மக்கள் பணியில் ஈடுபட்டவர்களும் இந்த நிகழ்வின் போது கெளரவிக்கப்பட்டனர்.

44
suriya arranged lunch for his fans

suriya arranged lunch for his fans

இதுதவிர அண்மையில் திருமணமான 50 ஜோடிகளுக்கும் தடபுடலாக விருந்து வைத்து அசத்தி இருக்கிறார் சூர்யா. அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து அளித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Vijay Sethupathi: 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த இளம் ஹீரோ யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved