MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Sethupathi: 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த இளம் ஹீரோ யார் தெரியுமா?

Vijay Sethupathi: 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த இளம் ஹீரோ யார் தெரியுமா?

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான, நானும் ரவுடி தான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டு ஃபீல் பண்ணிய நடிகர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 03 2024, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திர வேடம் என எந்த வேடம் கொடுத்தாலும், அசராமல் நடிக்கும் வித்தகன் தான் விஜய் சேதுபதி. அதிலும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் எதார்த்தமாக அவர் பேசும் டயலாக் சான்ஸே இல்லை! இதனால் தான் பாலிவுட், டோலிவுட் , மாலிவுட் என பிற மொழி இயக்குனர்கள் இவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம்.
 

25

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், 'நானும் ரௌடி தான்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த இந்த படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.காதல், காமெடி, ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் மூவியாக வெளியாகி... ரசிகர்கள் மனதை கவர்ந்த இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முன்பு ஹீரோவாக நடிக்க இருந்த பிரபலம் யார் என்கிற பழைய தகவல் வெளியாகியுள்ளது.

பாத் டவல் போல் இருக்கும் கிக்கான உடையில்... ஓப்பேன் வேறையா? கிளாமர் காட்டி இளசுகளை வெறியேற்றும் ராஷ்மிகா!
 

35

இந்த படத்தில் முதலில் பிரபல இளம் நடிகர் கெளதம் கார்த்தியை தான் ஹீரோவாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்ததாம், ஆனால் ஒரு சில காரணங்களால் கெளதம் கார்த்தி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டு, வேறு ஒரு படத்தில் கவனம் செலுத்தியுள்ளார். இதன் பின்னரே விஜய் சேதுபதியை இந்த படத்தின் உள்ளே கொண்டு வந்துள்ளது படக்குழு.
 

45

மேலும் இந்த படம், தரமான வெற்றியை பதிவு செய்த பின்னர். 'நானும் ரௌடி தான்' படத்தை மிஸ் செய்து விட்டேன் என பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறிய கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, மட்டுமே அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அதனால் இந்த பட வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து வருத்தப்பட வில்லை என்பதையும் தெரிவித்தார். 

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!
 

55

மேலும் விஜய் சேதுபதியை நேரில் பார்த்தபோதும் இப்படத்திற்காக அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு தற்போது வரை ஒரு சகோதரர்கள் போலவே இருந்து வருகிறார்கள். மேலும் இருவரும் இணைந்து 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்' என்கிற படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved