சுப்ரீம் ஸ்டாருடன் நெருக்கமாக நயன்தாரா.. பக்கத்துல 90ஸ் ஹீரோயின் வேற.. ஷாக் கொடுத்த லேடி சூப்பர்ஸ்டார்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பு, பிசினஸ் என கலக்கி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் திரைப்படமான ஜவான் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
சமீபத்தில் ஜவான் பட ரிலீசுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நயன்தாரா நுழைந்தவுடனே அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 5.9 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.
தன் குழந்தைகள், விக்னேஷ் சிவனோடு இருக்கும் புகைப்படம், ஜவான் பட போஸ்டர் என இடம்பிடித்திருந்த நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிசையாக பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
புதிதாக `9 Skin’ எனப் பெயரிடப்பட்ட அந்த போஸ்டரில் சரும பராமரிப்புக்கான தயாரிப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார் நயன்தாரா. நடிகை நயன்தாரா ஏற்கெனவே பிரபல சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் சேர்ந்து, சொந்தமாக `தி லிப் பாம் கம்பெனி பிராண்டை நடத்தி வருகிறார்.
இப்போது நயன்தாரா ’9 Skin’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் 9 ஸ்கின் நிறுவன தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
அதில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.