MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "நான் அதிகமா கவலைப்படுறதே இந்த விஷயத்துக்காக தான்..” மகள் குறித்து மனம்திறந்த நடிகர் ராமராஜன்..

"நான் அதிகமா கவலைப்படுறதே இந்த விஷயத்துக்காக தான்..” மகள் குறித்து மனம்திறந்த நடிகர் ராமராஜன்..

சமீபத்தில் ஒரு பேட்டியில் ராமராஜன் தன் மகள் அருணா சுப்ரமணியன் பற்றி மனம் திறந்து பேசினார்.

2 Min read
Author : Ramya s
Published : May 23 2024, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ramarajan

ramarajan

80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். நடிகர் மட்டுமின்றி, எழுத்தாளர், இயக்குனர் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 12வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

மண் மனம் மாறாத கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்த ராமராஜன் மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். 1977 முதலே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர்.

36
ramarajan

ramarajan

தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், ராசாவே உன்ன நம்பி, ரயிலுக்கு நேரமாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து ராமராஜன் நடித்த கரகாட்டகாரன் படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதை தொடர்ந்து என்ன பெத்த ராசா, மனசுக்கேத்த மகராசா, அன்புக்கட்டளை, தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

46

அவர் நடிகை நளினியை 1987 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ராமராஜன் தன் மகள் அருணா சுப்ரமணியன் பற்றி மனம் திறந்து பேசினார்.

56

அப்போது பேசிய அவர், “என் மகனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். என் பேரன் என்னை தாத்தா என்று அழைப்பான். வெளிநாட்டில் செட்டில் ஆனதால், வீடியோ கால் மூலம் தான் பேசுவேன். ஆனால் எனது மகளுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அவருக்கு குழந்தை இல்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. குழந்தை பிறந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.” என்று கூறினார்.

 

66

சாமானியன் படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளார் ராமராஜன். இப்படத்தை ஆர் ராகேஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த டிரெயிலரை யூடியூப்பில் 9 லட்சத்து 21 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ராதாரவி, கே.எஸ். ரவிக்குமார், மைம் கோபி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ராமராஜன் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved