Asianet News TamilAsianet News Tamil

Modi 3.0 : மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றார் - Live Telecast!

Narendra Modi : நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்று வருகின்றனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என் டி ஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அண்டை நாட்டுத் தலைவர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று என்டிஏ தலைவர்களை சந்தித்தார். பதவி ஏற்பின்போது  முதல் வரிசையில் பாஜக மூத்த தலைவர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories