Asianet News TamilAsianet News Tamil

Reshma Workout : இது தான் உங்க அழகின் ரகசியமா?.. ஜிம்மில் செம ஒர்க் அவுட்.. மாஸ் காட்டும் ரேஷ்மா - Video!

Actress Reshma Pasupuleti : பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது வீட்டில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Serial and kollywood actress reshma pasupuleti work out video viral in social media ans
Author
First Published Jun 11, 2024, 9:19 PM IST

தெலுங்கு திரையுலகில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர் தான் பிரசாத் பசுபுலேட்டி. அவருடைய மகள் தான் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அமெரிக்காவின் இருபெரும் நகரங்களில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ரேஷ்மா, பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். 

அதன் பிறகு பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த அவர், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான "லவ்" என்கின்ற சின்னத்திரை நாடகத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்கின்ற சீரியல்.

கமல்ஹாசன் முதல் இளையராஜா வரை... ஏராளமா பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் சார்லி மகன் திருமண ரிசப்ஷன் போட்டோஸ்! 

இதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும், நாடகங்களிலும் தொடர்ச்சியாக கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மிகச்சிறந்த நடிகை நான் ரேஷ்மா. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர், புது மாப்பிள்ளை பிரேம்ஜி அமரன் நடிப்பில் வெளியான "சத்திய சோதனை" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று இவர் நடித்திருந்தார். 

தனது மகனோடு வாழ்ந்து வரும் ரேஷ்மா, 45 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதற்காக அவர் தன் வீட்டில் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. 

Vetri Vasanth : சிறகடித்து மலேசியா பறந்த வெற்றி வசந்த்.. ட்வின் டவர்ஸ் அருகில் கெத்து போஸ் - Viral Pics!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios