Asianet News TamilAsianet News Tamil

தேனி: பேருந்தில் பயணித்த பெண் தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்.. வைரலாகும் CCTV காட்சிகள்..

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் செய்தார். நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கை பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த பெண் பேருந்தில் இருந்து வெளியே தவறி விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும், பேருந்து நடத்துனர் தவறி விழும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.  இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?

Video Top Stories