டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் விரைவில் வரவுள்ளது. இது வாகன சந்தையில் வரும் போது அனைத்து இரு சக்கர வாகனங்களையும் தாக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Cheapest Electric Scooter
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்றான டாடா, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது மிக குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டியை களமிறக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Electric Scooters
இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 கிமீ வரை மைலேஜ் தரும் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து டாடா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இரண்டே மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும்.
Tata's new electric scooter coming soon
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிஸ்க் பிரேக், யுஎஸ்பி சார்ஜிங், செக்யூரிட்டி அலாரம் உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதுடன், மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Tata's cheapest electric scooter price
வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. டாடா நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்பது தெரிந்ததே, முதற்கட்டமாக இந்தியாவின் சில நகர்ப்புறங்களில் மட்டும் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Tata's electric scooter Features
ஆதாரங்களின்படி, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67,000 மற்றும் ரூ.2,200 மாதாந்திர EMI தவணை வடிவில் கடனாக வாங்குவதற்கான விருப்பம் உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து டாடா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..