எல்லாரும் 'மோடியின் குடும்பம்' என்பதை அகற்றுங்கள்: மோடி போட்ட திடீர் உத்தரவு ஏன்?
Modi Ka Parivar campaign:
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சமூக ஊடக தளங்களில் 'மோடி கா பரிவார்' (மோடியின் குடும்பம்) என்று கூறி வாக்கு சேகரித்து நரேந்திர மோடி, அப்போது அந்த வாசகத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு அளித்த ஆதரவுக்காக தனது நன்றியும் கூறியுள்ளார்.
மக்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து 'மோடி கா பரிவார்' (மோடியின் குடும்பம்) என்ற பின்னொட்டை நீக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். "நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'மோடியின் குடும்பம்' என்பதை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை அகற்றினாலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே குடும்பமாக, தனக்கும் குடிமக்களுக்கும் இடையே உள்ள வலுவான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பு அப்படியே உள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற தங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 140 கோடி இந்தியர்களும் தனது குடும்பம் என்று கூறினார். அதைத் தொடர்ந்து 'மோடி கா பரிவார்' பிரச்சாரம் குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் லாலு பிரசாத் மோடிக்கு 'குடும்பம் இல்லை' என்று கிண்டல் செய்திருந்தார். அதற்குப் பதிலடியாக மோடி 140 கோடி இந்திய மக்களும் தனது குடும்பம்தான் என்று பேசினார்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளில் பெயருக்குப் பின்னால் 'மோடி கா பரிவார்' என்று சேர்த்து பிரச்சாரம் செய்தனர்.
பாஜக முதல்வர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தனர். மோடியை ஆதரிக்கும் பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் சுயவிவர பக்கங்களில் பெயருக்குப் பக்கத்தில் 'மோடியின் குடும்பம்' என்பதைச் சேர்த்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
எலான் மஸ்க் பதிவிட்ட தமிழ் பட மீம்! ஆப்பிள் - சாட்ஜிபிடி கூட்டணி மீது குவியும் விமர்சனம்!