Madhavan: தன்னை விட வயதில் மூத்த.. முன்னணி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகர் மாதவன்! அவர் யார் தெரியுமா?
நடிகர் மாதவன், பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக தன்னுடைய அம்மாவிடம், கூறிய விஷயத்தை முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படம் மூலம் அறிமுகமானவர் மாதவன். இதை தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என தொடர்ந்து, ரொமான்டிக் படங்களாகவே தேர்வு செய்து நடித்ததால், ரசிகர்கள் மத்தியில் சாக்லெட் பாய் என அழைக்கப்பட்டார்.
Kollywood Actor R Madhavan
இதை தொடர்ந்து இவர் நடித்த 'கன்னத்தில் முத்தமிட்டாள்' திரைப்படம் மாதவனின் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழில் ஏனோ இவருக்கு தொடர்ந்து காதல் படங்கள் மட்டுமே கிடைத்ததால், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார்.
Rocketry: The Nambi Effect
பாலிவுட் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் மாதவம், சில வருடங்கள் தன்னுடைய காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக... திரையுலகில் இருந்து சிறு இடைவெளி எடுத்து கொண்டார். இதை தொடர்ந்து, இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் இவர் கொடுத்த கம் பேக் படு மாஸாக இருந்தது. இதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். நடிப்பை தாண்டி, நம்பி எபெக்ட் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.
இந்நிலையில் Netflix ஒரிஜினல் ஓடிடி தலத்தில் மாதவன் நடித்துள்ள வெப் சீரிஸ்' தி ரயில்வே மென்' வெளியாக உள்ள நிலையில், இதன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட விஷயத்தை முதல் முறையாக கூறினார். இந்த தொடரில் நடித்துள்ள ஜூஹி சாவ்லா முன்பாக," நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், நான் அனைவருக்கும் முன்பாக ஒரு வாக்குமூலம் அளிக்க விரும்புகிறேன். நான் கயாமத் சே கயாமத்தை பார்த்தபோது. தக் (QSQT), 'நான் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று அம்மாவிடம் கூறியிருந்தேன்.
ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்போது எனது ஒரே நோக்கம்." என தெரிவித்தார். மேலும் இந்த வெப் சீரிஸிலும் ஜூஹியுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அவரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னரே என்னுடைய காட்சி படமாக்கப்பட்டதாக தெரிவித்தார். ஜூஹி சாவ்லா, நடிகர் மாதவனை விட மூன்று வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D