- Home
- Gallery
- Keerthy Suresh: கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!
Keerthy Suresh: கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பெண்களுக்கு நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற பிரபலமாகவும் அறியப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில், நடிப்பதில் அதிக கவனம் செலுத்தும் இவர், தற்போது... கிரிக்கெட் விளையாட்டின் நல்லெண்ண தூதராக மாறியுள்ளார்.
அதாவது கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (கேசிஏ) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் கலந்து கொண்ட கேரளாவின் ஒரே தேசிய அணி வீரரான மின்னு மணியையும் கௌரவித்தார்.
உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் முதல் தர மற்றும் சூப்பர் லீக் கட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தினார். மேலும் 2017-18 ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய T-20 சாம்பியன்ஷிப்பை வென்றது பற்றியும் கேட்டறிந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிகழ்வில், கீர்த்தி சுரேஷ் அனைவருடனும் கலந்து கொண்டு புகைப்படங்களும் எடுத்து கொண்டு... கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது இதுகுறித்த, புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளம் வீராங்கனைகளுக்கு நேரம் ஒதுக்கு ஊக்குவித்த கீர்த்தி சுரேஷுக்கு பலர் தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.