திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின் கூடிய கவர்ச்சி! நீச்சல் குள புகைப்படம் வெளியிட்டு வாயடைக்க வைத்த அஞ்சனா!
பிரபல தொகுப்பாளினியும், நடிகர் கயல் சந்திரனின் மனைவியுமான அஞ்சனா, ஹீரோயின்களையே பீட் பண்ணும் விதத்தில், நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு வாயடைக்க செய்துள்ளார்.
anjana
அஞ்சனா, பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில், ரசிகர்களுடன் பேசி பாடல்களை தொகுத்து வழங்கியதன் மூலம்... ஒரு தொகுப்பாளினியாக மிகவும் பிரபலமானவர். இவரின் கியூட் அழகிற்கும், படபடவென பேசும் பேச்சுக்கும், ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி, சினிமா நிகழ்ச்சிகள், மற்றும் அவார்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அஞ்சனா கடந்த 2016-ம் ஆண்டு, கயல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த ஜோடிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணத்திற்கு முன்பு கூட, அடக்கம் ஒடுக்கமான உடையில்... போட்டோ ஷூட் மற்றும், சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிடும் அஞ்சனா, திருமணத்திற்கு பின்னர் கவர்ச்சியில் நடிகைகளையே ஓவர் டேக் செய்து வருகிறார்.
மேலும் இன்ஸ்டாகிராமிலும் இவரை சுமார் 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் கணவர் - குழந்தைகளுடன் மாலத்தீவுக்கு சென்ற போது... எடுத்து கொண்ட சில நீச்சல் குள புகைப்படத்தை பதிவித்துள்ளார். அஞ்சனாவா இப்படி என? இந்த போட்டோவை வாயடைத்து போய், பார்த்து ரசித்து வருகின்றனர் இவரது ரசிகர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D