முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் ஜோடி - மனைவியோடு திருவண்ணாமலை சென்ற ஹரிஷ் கல்யாண்!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வருகின்ற ஒரு இளம் நடிகர் தான் ஹரிஷ் கல்யாண். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் நர்மதா உதயகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
Harish Kalyan
தமிழ் திரையுலகில் அப்பாஸ், மாதவன் போன்ற பல சாக்லேட் பாய்கள் முன்னணி நடிகர்களாக வலம் வந்ததுண்டு. அந்த வகையில் தற்பொழுது ஹரிஷ் கல்யாண் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Actor Harish Kalyan
குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லயம் லைடுக்கு வந்த ஹரிஷ் கல்யாண், கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த 2023ம் ஆண்டு மட்டும் ஹரிஷ் நடிப்பில் 5 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Harish
அண்மையில் தல தோனியின் தயாரிப்பில் வெளியான LGM திரைப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.இந்நிலையில் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை விரைவில் கொண்டாடவிருக்கும் ஹரிஷ் கல்யாண், தனது மனைவி நர்மதா உதயகுமாருடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.