MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 69 வயதிலும்... மனைவி ராதிகா மீது குறையாத காதல் ! 23 ஆம் ஆண்டு திருமண நாளில் சரத்குமார் கொடுத்த சர்பிரைஸ்!

69 வயதிலும்... மனைவி ராதிகா மீது குறையாத காதல் ! 23 ஆம் ஆண்டு திருமண நாளில் சரத்குமார் கொடுத்த சர்பிரைஸ்!

நேற்று நடிகை ராதிகா - சரத்குமார் ஜோடி தங்களின் 23-ஆவது திருமண நாளை கொண்டாடும் நிலையில்... மனைவி ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுள்ளார் சரத். இதுகுறித்து ராதிகா தன்னுடைய சமூக வலைதளப்பாக்கத்தில் காதலோடு அறிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 05 2024, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தென்னிந்திய திரையுலகில், 60 வயதை கடந்தும்... குறையாத காதலுடன் கியூட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா - சரத்குமார் இருவரும் நேற்று தங்களின் 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

28

சரத்குமார் ஏற்கனவே சாயா என்பவரை காதலித்து கரம் பிடித்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். சாயா மூலம் சரத்குமாருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். 


 

38

ராதிகாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை முறை திருமணம் ஆகி விவாகரத்தில் முடிந்தது. முதல் கணவர் பிரதாப் போத்தனுடன் ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்த ராதிகா, பின்னர் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் மட்டுமே இந்த வாழ்க்கை தொடர்ந்தாலும்.. இவர் மூலம் ராதிகா ரேயான் என்கிற தன்னுடைய மகளை பெத்தெடுத்தார்.

48

ரேயான் பிறந்த பின்னர்... முழுக்க முழுக்க அவருக்காகவே வாழ துவங்கினார். மகளை ஒரு சிங்கிள் மதராக வளர்த்து கொண்டே, அம்மாவின் உதவியுடன் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

கட்டுக்கடங்காத கூட்டம்.. ஆந்திராவில் ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள் - வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

58

இதை தொடர்ந்து, ராதிகா - சரத்குமார் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே இருந்த ஆழமான நட்பு... பின்னர் காதலாக மாறியதால், எளிமையான முறையில் 2001-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் வீட்டிலேயே நடந்தது.

Baby John: 'தெறி' ரீமேக்.. அட்லீ தயாரிப்பில் உருவாகும் படத்தின் மாஸ் ப்ரோமோ ரிலீஸ் தேதியுடன் வெளியானது!

68

திருமணத்திற்கு பின்னர், ராதிகா - சரத்குமார் ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் பிரிந்தார். தற்போது ராகுல் அமெரிக்காவில் சினிமா சம்மந்தமான படிப்பை படித்து வருகிறார். திருமணம் ஆனதில் இருந்து... இணை பிரியாத காதல் ஜோடிகள் போல், கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் நேற்று தங்களின் 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். 

78

இதனை மிகவும் எளிமையாக இருவருமே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் தன்னுடைய மனைவி ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில்... ராதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சர்பிரைஸ் கொடுத்துள்ளார் சரத்.

Trisha: த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருக்கு ஜோடியான சவுத் குயின்!

88
radhika

radhika

தற்போது இவர் நடித்து வரும் படப்பிடிப்பு புதுவையில் நடந்து வரும் நிலையில்... சரத்குமார் பாண்டிக்கு நேரடியாக சுமேரு தன்னுடைய மனைவிக்கு வாழ்த்து கூறி அன்பு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த அழகிய தருணத்தை காதலோடு கணவரை கட்டிபிடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோசை வெளியிட்டு ராதிகா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராதிகா மற்றும் சரத்குமார் ஜோடிக்கு  ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா சரத்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved