யூடியூபர் வாசனுக்கு சிறை தண்டனை விதிப்பு... டிடிஎப் மீது அடுத்தகட்ட ஆக்ஷனுக்கு தயாரான போலீஸ்..!
சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TTF vasan
புகழ்பெற்ற யூடியூபரான டிடிஎப் வாசன், வேகமாக பைக் ஓட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர்மீது ஏற்கனவே கோவையில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஸ்டிராவுக்கு பைக் ரைடு சென்றுள்ளார் வாசன். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது ரோட்டில் வீலிங் செய்து சாகசம் செய்தபடி பைக் ஓட்டிச் சென்றுள்ளார் வாசன்.
TTF Vasan Accident
அப்போது நிலைதடுமாறி, பைக் சாலையோரம் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டார். அவரது 20 லட்சம் மதிப்பிலான பைக்கும் பல்டி அடித்து பறந்தது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டிடிஎப் வாசனுக்கு கையில் எலும்புமுறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... நான் வீலிங் பண்ணல.. இதனால் தான் விபத்தில் சிக்கினேன் - புது விளக்கம் தந்த TTF.. எப்புட்ரா என நெட்டிசன்கள் ஷாக்
TTF Vasan arrest
இந்த விபத்து தொடர்பாக டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை இன்று காலை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது டிடிஎப் வாசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை வாசன் சிறையில் அடைக்கப்பட உள்ளார். அவரை சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
youtuber TTF Vasan
அதுமட்டுமின்றி தொடர்ந்து இதுபோன்ற பைக் சாக்சங்களை செய்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் டிடிஎப் வாசனால் பைக் ஓட்ட முடியாத சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?