விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!
நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக, தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பேசி... கேட்பவர்கள் மனங்களையே உருக வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் வித்தியாசமான நடிகராகவும், அன்பான மனிதராகவும் இருப்பவர் விஜய் சேதுபதி. குறிப்பாக நான் அப்படிதான் நடிப்பேன்... இப்படித்தான் நடிப்பேன்... என பந்தா காட்டும் நடிகர்கள் மத்தியில் இவர் தனித்து நிற்கிறார் என்று தான் கூற வேண்டும்.
நடித்த நான்கு படங்கள் ஹிட்டாகி விட்டாலே ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன், மற்ற ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் நடிகர்கள் மத்தியில், ஹீரோவாக இருந்தும்.. தொடர்ந்து வில்லன், சிறப்பு தோற்றம், என கலவையான ரோல்களை கூட தன் மனதுக்கு பிடித்தது போல் தேர்வு செய்தும், நட்பக்காகவும் நடித்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
மேலும் செய்திகள்: அஞ்சலிக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்..
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோவாக நடித்து வெளியான 'காத்து காக்கள ரெண்டு காதல்' படமும் சரி, வில்லனாக நடித்து வெளியான 'விக்ரம்' படமும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நீண்ட நாட்களாக எப்போது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வெளியான 'மாமனிதன்' திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சமீப காலமாக விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு மாஸான வில்லன் கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்றால், அதில் விஜய் சேதுபதி பெயர் அந்த லிஸ்டில் இடம்பெற்று விடுகிறது. தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பட வாய்ப்புகளும் இவர் லிஸ்டில் வரிசை கட்டி நிற்கிறது.
மேலும் செய்திகள்: பட விழாவுக்கு வர அவசரத்துல... துப்பட்டவை எடுத்து சுத்திகிட்டு வந்துட்டாங்களோ? ஷாக் கொடுத்த அனன்யா பாண்டே!
எனவே எப்போதும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இவரது இந்த கதையை கேட்கும் பலர், இவர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான '96 ' படத்தின் கதை போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ளதாவது... நான் 'ஜானு' என்கிற பெண் பின்னாடி சுமார் 4 வருடங்கள் சுற்றினேன். ஆனால் அந்தப் பொண்ணுக்கு கடைசி வரை அது தெரியாது. இப்போது கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன் பின் பல நாட்கள் அவரை நான் பார்க்கவே இல்லை. என் திருமணத்திற்கு முன்பு, ஒரு நாள் என் தந்தையுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனாங்க, நான் வண்டியை திருப்பினேன் என் தந்தை ஏண்டா வண்டியை திருபுறனு கேட்டாரு... அப்போ நான் நான்கு வருடமா சைட் அடிச்ச பொண்ணு போகுதுன்னு நினைக்கிறேன், பாத்துட்டு போயிடலாம்னு சொன்னேன் அதன் பின் திரும்பி அவங்கள பார்க்க முடியவில்லை.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
இப்போது நான் திரும்ப பார்த்துவிட வேண்டாம் என நினைக்கிறேன். எப்போ அதைப்பற்றி நினைத்தாலும் அந்த பொண்ணு, அப்படியே ஸ்கூல் யூனிபார்ம்மில் வர இமேஜ் தான் என் கண்ணுக்குள் வரும். அது ஒரு அழகான விஷயம். அந்தப் பழைய விஷயம் ரொம்ப அழகு, அது அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அதை அழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன் என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படம் வெளியாகி பலரது பள்ளி பருவ நினைவுகளை நினைவு, மற்றும் காதல் போன்றவற்றை நினைவு படுத்திய நிலையில்... இதே போல், இதில் நடித்த ஹீரோவின் வாழ்க்கையிலும் ரியல் ஜானு என்கிற ஒரு பெண் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது மட்டுமின்றி, பலனையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
மேலும் செய்திகள்: அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?