51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
நடிகை குஷ்பூவின் இளமை பொங்கும் புகைப்படங்கள் சிலவற்றை அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அவை படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர். இவருக்காக ரசிகர்கள் கோவில் கோவில் கூட காட்டியுள்ளனர். அதே போல் முதல் முதலாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் காட்டியுள்ளார்கள் என்றால் அது இவருக்கு தான்.
திருமணத்திற்கு பின்னர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அழுத்தமான கேரக்டர் ரோல்களில் நடிக்க துவங்கினார். குழந்தைகள் பிறந்த பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: லவ் யூ அம்மா, மிஸ் யூ அம்மா... இறந்த தாயார் பற்றி கண்ணீர் வர வைக்கும் நினைவுகளை பகிர்ந்த நடிகர் உதயா!
ஒரு கட்டத்தில் வெள்ளித்திரை படங்களை தொடர்ந்து, சின்னத்திரை ஹீரோயினாக மாறினார். அப்படி இவர் நடித்த கல்கி, நந்தினி, லட்சுமி ஸ்டார் போன்ற சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளான ஜக்கபார்ட், மானாட மயிலாட போன்ற சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளது மட்டும் இன்றி, நடுவராகவும் இருந்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவிடம் நீங்கள் முஸ்லீம் தானே? பின் ஏன் இப்படி.. நெட்டிசன் கேள்விக்கு நச் பதிலடி !
தமிழை தவிர, தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் குஷ்பூ நடித்துள்ளார். தற்போது இவரது கை வசம் ஹாரா மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.
முன்பை விட அழகில் மெருகேறி கொண்டே செல்லும் குஷ்பூ, தற்போது... 20 வயது ஹீரோயின் போல், தகதகவென மின்னியபடி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: கடைசில இப்படி ஆகிடுச்சே... அஜித்துக்கு பதிலா யாஷிகா..? செம்ம அப்செட்டான ரசிகர்கள்..!