கடைசில இப்படி ஆகிடுச்சே... அஜித்துக்கு பதிலா யாஷிகா..? செம்ம அப்செட்டான ரசிகர்கள்..!
நடிகர் அஜித் சமயபுரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்கிற வதந்தி பரவிய நிலையில், திடீர் என யாஷிகா அங்கு வந்ததால் ரசிகர்கள் செம்ம அப்செட் ஆகினர். எனினும் பலர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது .
அஜித்தை பொறுத்தவரை கடந்த ஓரிரு வருடமாக திடீர்... திடீர்... என தனக்கு பிடித்த இடங்களுக்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் தான் தன்னுடைய குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். விரைவில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித், நேற்று திடீரென சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக, குடும்பத்துடன் வருகை தர உள்ளதாக ஒரு வதந்தி வேகமாக பரவியது.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... 'தி லெஜண்ட்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஊர்வசி ரவுத்தலா!
இந்த வதந்தியை உண்மை என நினைத்த அஜித்தின் ரசிகர்கள் பலர், திடீர் என சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து குவிந்தனர். வெகு நேரம் ஆகியும் பலர் அஜித்தை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
மேலும் செய்திகள்: அட யோகி பாபுவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!
ஆனால் கடைசி வரை அஜித் அங்கு வரவில்லை பின்னர் தான் அது வதந்தி என அவர்களுக்கு தெரியவந்தது. அஜித் அங்கு வரவில்லை என்றாலும், யாரும் எதிர்பாராத வண்ணம் யாஷிகா சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார், அஜித்துக்கு பதில் யாஷிகா வந்தது பல ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், சிலர் யாஷிகாவாவது வந்தாரே என மனதை தேற்றி கொண்டு அவருடன் புகைப்படங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!
yashika annand
நடிகை யாஷிகா தற்போது விபத்தின் காரணமாக நடிக்க முடியாமல் இருந்த படங்களின் படங்களின் பணியிலும், புதிதாக தன்னை தேடி வரும் படங்களின் கதைகளை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.