'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவிடம் நீங்கள் முஸ்லீம் தானே? பின் ஏன் இப்படி.. நெட்டிசன் கேள்விக்கு நச் பதிலடி !
'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி ஃபரினாவிடம் கேள்வி கேட்டு நெட்டிசன் ஒருவர் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து சீரியலாக எடுக்காமல், ஒவ்வொரு சீரியலிலும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை உட்புகுத்தி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சீரியல்களை எடுப்பது தான் விஜய் டிவியின் மிகப்பெரிய பலம் என்றும் கூறலாம்.
அந்த வகையில் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உள்ளனர். அம்மாவை இழந்து சித்தியின் கொடுமையால் அவதிப்படும் பெண், எப்படி ஒரு மருத்துவரை திருமணம் செய்கிறார். பின்னர் கட்டிய கணவனே தன்னை சந்தேகப்பட்டதும் அவரிடம் இருந்து பிரிந்து வைராக்கியமாக தன்னுடைய குழந்தையை தனி ஆளாக வளர்கிறார். என்கிற போராட்டத்தை பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக எடுத்துக் கூறி வருகிறது இந்த சீரியல்.
மேலும் செய்திகள்: முற்றிலும் பொய்... இதை யாரும் நம்ப வேண்டாம்: 'வாரிசு' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்த சீரியலில் தற்போது கதாநாயகியாக முதலில் ரோஷ்ணி நடித்து வந்த நிலையில் தற்போது வினுஷா நடித்து வருகிறார். எப்படியும் கதாநாயகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று போராடி வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரத்திற்காக செல்லும் இடமெல்லாம் இவர் திட்டு வாங்கினாலும், அதனை தனக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பாக நினைத்து தன்னுடைய நடிப்பை மெருகேற்றி நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: கடைசில இப்படி ஆகிடுச்சே... அஜித்துக்கு பதிலா யாஷிகா..? செம்ம அப்செட்டான ரசிகர்கள்..!
farina
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், மற்றும் தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில்அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், ரசிகர்களுடன் ஃபரீனா கலந்துரையாடினார். அப்போது நெடிசன் ஒருவர் நீங்கள் முஸ்லிம் சரி தானே? அப்புறம் அடிக்கடி பிரே பண்றீங்களா? என கேள்வி எழுப்பி... ஏன் இப்படி ஹராம் வேளையில் ஈடுபடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகள்: அப்போ தியேட்டரில் அதிரடி... சரவெடி தான்! 'வாரிசு' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்!
இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பதிலடி கொடுத்துள்ள ஃபரீனா, சமூக ஊடகத்தில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின் தொடர்வது, அவரிடம் கேள்வி கேட்பது தான் ஹராம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே முதலில் உன்னை சுத்தமாக வைத்துக்கொண்டு, பின்பு என்னிடம் நான் கேள் என பளீச் என பதில் கொடுத்துள்ளார். இவருடைய இந்த பதில் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.