அப்போ தியேட்டரில் அதிரடி... சரவெடி தான்! 'வாரிசு' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்!
'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன்... வேற லெவல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை, தளபதி விஜய் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு கொடுத்துள்ளார்.
'வாரிசு' என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... 'தி லெஜண்ட்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஊர்வசி ரவுத்தலா!
ஹைதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் படக்குழுவினர். குடும்ப செண்டிமெண்ட் கலந்த கதையாக அப்படம் எடுக்கப்பட்டடு வருகிறது. இந்த திரைப்படத்தில், புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், குஷ்பூ, யோகி பாபு என முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்:அட யோகி பாபுவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!
ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக்குகள் வெளியான நிலையில், தற்போது இப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றையும், இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!
இதுகுறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், விஜய்க்காக தங்களது பெஸ்ட்டை கொடுக்கவே விரும்புவதாகவும், அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம் என கூறியுள்ளார். ரசிகர்கள் தியேட்டரில் டான்ஸ் ஆடும் அளவுக்கு மாஸ் பாடல்கள் வருமா என கேட்டதற்கு, "கண்டிப்பாக ஆடுவாங்க.. அது எப்படி விஜய் சார் படம் என்றால் இயக்குனர் விட்டு விடுவாரா" என தமன் பதிலளித்துள்ளதால் ரசிகர்கள் தியேட்டரில் பட்டையை கிளப்பும் அளவிற்கு பாடல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.