MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?

அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?

திடீர் என தெலுங்கு திரையுலகில்... சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி, முடிவுகள் எடுக்கப்படும் வரை, திரையுலகினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது, அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு மிக பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 28 2022, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சமீப காலமாக, தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்றோர்... சென்னையில் படப்பிடிப்பை நடத்த பல ஃபிலிம் சிட்டி இருந்தாலும், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராம் ஃபிலிம் சிட்டியை தேடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு தங்களுடைய படங்களுக்கு ஏற்றாப்போல், மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. 
 

24

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகம் திடீரென வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ரஜினி, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்புப்பு குறித்த நேரத்தில் எடுத்து முடிக்கமுடியாமல், தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது


மேலும் செய்திகள்: அஞ்சலிக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்..
 

34

அதாவது கொரோனா பரவலுக்கு பிறகு, தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசி முடிவெடுக்க முடிவு செய்துள்ளதால், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என தெலுங்கு திரையுலகின் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

44

எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு மாநிலங்களில் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டு, அதற்கான அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தற்போது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும் படப்பிடிப்புகளான ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'ஏகே 61' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் குறித்த நேரத்தில் எடுக்கமுடியாமல் புதிய பிரச்சனையாக வந்துள்ளது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் துவங்குவதற்கு முன்பே இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress Meenakshi Chaudhary : புடவையில் ரசிகர்களை மயக்கும் லுக்!! பார்க்க பார்க்க பிடிக்கும் நடிகை மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்!!
Recommended image2
ஜனநாயகனுக்கு பெரும் பின்னடைவு.. தலைகீழாக மாறிய தீர்ப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Recommended image3
Actress Aarthi Subash : மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுக்கும் 'சின்னத்திரை' நடிகை ஆர்த்தி சுபாஷ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved