பட விழாவுக்கு வர அவசரத்துல... துப்பட்டவை எடுத்து சுத்திகிட்டு வந்துட்டாங்களோ? ஷாக் கொடுத்த அனன்யா பாண்டே!
சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட ஹீரோவாக நடித்த 'லிகர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே... மிகவும் வித்தியாசமான தூக்கலான கவர்ச்சி உடையில் வந்து ஷாக் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ..
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா பைட்டராக நடித்துள்ள திரைப்படம் 'லிகர்'.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான அனன்யா பாண்டே நடித்துள்ளார். மிக பிரமாண்டமாக குத்துசண்டை செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் , நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: போடுடா வெடிய... பிக்பாஸ் சீசன் 6 எப்போது துவங்குகிறது? தொகுப்பாளர் யார்? கசிந்தது தகவல்..!
இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. இதை தவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து இதனை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழுவினர் தயாராகி உள்ளனர்.
மேலும் இப்படத்தில் உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் வில்லனாக நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக, படு தில்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
இந்நிலையில் இந்த படம் அடுத்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் விஜய் தேவரகொண்டா மிகவும் எளிமையான உடைகள் மற்றும் ஸ்லிப்பர்ஸ் அணிந்து கலந்து கொண்டு பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவிடம் நீங்கள் முஸ்லீம் தானே? பின் ஏன் இப்படி.. நெட்டிசன் கேள்விக்கு நச் பதிலடி !
ஆனால் அனன்யா பாண்டே எல்லை மீறும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ஷாக் கொடுத்தார். வரும் அவசரத்தில் ஒரு துப்பட்டாவை எடுத்து உடலில் சுற்றி கொண்டது போன்றே இந்த ஆண்டை இருந்தது. தற்போது இவர் அணிந்திருந்த உடை, சமூக வலைதளத்தில் வெளியாக, நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.