போடுடா வெடிய... பிக்பாஸ் சீசன் 6 எப்போது துவங்குகிறது? தொகுப்பாளர் யார்? கசிந்தது தகவல்..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி, விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில்.. எப்போது நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது? யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழக மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய இமாலய வெற்றியை பெற்றதற்கும், ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளதற்கும் முக்கிய காரணமாக இருப்பவர், நடிகரும், தொகுப்பாளருமான கமலஹாசன் எனலாம். முதல் சீசனில் இருந்து இப்போது வரை, எந்த இடத்தில் யாரை எப்படி கண்டிக்க வேண்டும்? யாரை திட்ட வேண்டும்... என பார்வையாளர்களின் பிரதிநிதியாக மேடைகள் நின்று பல்வேறு கேள்விகளால் போட்டியாளர்களை வெளுத்து வாங்குவார்.
அதே நேரம் சில நேரங்களில் நாசுக்காக இவ்வளவுதான் இந்த மேடையில் நின்று என்னால் பேச முடியும் என நாகரீகமாக அது குறித்து போட்டியாளர்களுக்கு எடுத்தும் உரைப்பார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் அந்த இரண்டு நாட்கள் மட்டும், வேறு லெவலுக்கு டி.ஆர்.பி எகிறும்.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனும் விரைவில் துவங்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு, பல இளம் நடிகர்கள் மற்றும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த காத்திருக்கும் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
அதேநேரம் இந்த நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற அனைவருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்த விடுகிறதா என்றால் அது சந்தேகமே? காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரவ், ரித்விகா, ஆரி, போன்றோர் தங்கள் நடிப்பு திறமையை நிரூபிக்கும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது வரை போராடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவிடம் நீங்கள் முஸ்லீம் தானே? பின் ஏன் இப்படி.. நெட்டிசன் கேள்விக்கு நச் பதிலடி !
பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை தாண்டி, ஓடிடியிலும், பிக்பாஸ் அல்டிமேட் என துவங்கப்பட்டு ஒளிபரப்பானது. இதில் பிக்பாஸ் போட்டியில் ஏற்கனவே கலந்து கொண்ட சில பிரபலங்கள் மீண்டும் கலந்து கொண்டு விளையாடினர். சில புதிய போட்டியாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பாதியை மட்டுமே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் மீதி பாதியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். எனவே அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? அல்லது சிம்பு வருவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கவே நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: முற்றிலும் பொய்... இதை யாரும் நம்ப வேண்டாம்: 'வாரிசு' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
அதேபோல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.