- Home
- Cinema
- விஜய்யை சீண்டி வம்பில் மாட்டிய இயக்குநர் வசந்த பாலன்! வச்சி செய்யும் தவெகவினர்! என்ன நடந்தது?
விஜய்யை சீண்டி வம்பில் மாட்டிய இயக்குநர் வசந்த பாலன்! வச்சி செய்யும் தவெகவினர்! என்ன நடந்தது?
விஜய்யின் தவெக மாநாட்டை குறைகூறிய இயக்குநர் வசந்த பாலனுக்கு தவெக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மதுரை தவெக மாநாடு
தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடந்தது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்த விஜய் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு இருந்த ராம்ப் வாக்கில் நடந்து சென்றபோது தவெக தொண்டர்கள் சிலர் விஜய்யை பகக்த்தில் இருந்து காணும் ஆர்வத்தில் ராக் வாக் மீது ஏறினார்கள். அப்போது விஜய்யின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் அவர்களை பிடித்து தள்ளினார்கள்.
தவெக மாநாட்டில் நடந்த சர்ச்சை
இதில் ஒரு தவெக தொண்டர் விஜய் பவுன்சர்கள் தள்ளி விட்டதால் நெஞ்சில் காயம் அடைந்து விட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தவெக மாநாட்டில் விஜய் ரசிகர்களின் அடாவடிக்கும், பவுன்சர்களின் செயலுக்கும் நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அங்காடித் தெரு, வெயில் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலன், விஜய்யின் தவெகவை விமர்சித்துள்ளார்.
விஜய்யை சீண்டிய வசந்த பாலன்
அதாவது பூக்கி திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய அவர், ''அண்மையில் ஒரு அரசியல் மாநாட்டை பார்த்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகின்றனர். காலையில் இருந்து வெயிலில் காத்திருந்து கருகினார்கள். அதை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருந்தது. அந்த இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. வேறு திசை நோக்கி அவர்கள் செல்கிறார்கள்'' என்று தெரிவித்து இருந்தார்.
வசந்த பாலனுக்கு தவெகவினர் பதிலடி
விஜய்யின் தவெக மாநாட்டை இயக்குநர் வசந்த பாலன் சீண்டியதால் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ஆவேசமாக பொங்கியெழுந்துள்ளனர். ''சுமார் 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் இதுபோன்ற சிறு சம்பவங்கள் நடப்பது இயல்புதான். இது வசந்த பாலனுக்கு தெரியாதா'' என்று தவெகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ''திமுகவின் இளைஞரணி மாநாட்டில் திமுகவினர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனரே. அவர்களை அரசியல்படுத்த திமுக தலைமை தவறி விட்டதா? அது பற்றி வசந்த பாலன் ஏன் வாய் திறக்கவில்லை?'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
தமிழக பிரச்சனைகளுக்கு ஏன் கருத்து தெரிவிக்கவில்லை?
மேலும் ஒரு சில தவெக தொண்டர்கள், ''புதிதாக அரசியலுக்கு வந்தவரின் குறைகளை பார்க்கும் வசந்த பாலன், தமிழகத்தில் நிலவும் சாதி ஆணவ கொலைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை. ஆளும் கட்சி என்பதால் பயமா?'' என்று வசந்த பாலனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.