MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி 'மகாநதி' சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்; யாருக்கு அதிகம் தெரியுமா?

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்; யாருக்கு அதிகம் தெரியுமா?

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'மகாநதி சீரியலில்' நடித்து வரும் பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
manimegalai a
Published : Nov 22 2024, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Mahanadhi Serial Cast Salary

Mahanadhi Serial Cast Salary

விஜய் டிவி தொடரில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ஒரு ரகம். அந்த வகையில் நான்கு அக்கா - தங்கைகள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலை, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, போன்ற ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்டென்ட் தான் இயக்கி வருகிறார்.

28
Mahanadhi serial update

Mahanadhi serial update

கொடைக்கானலில் வாழும் சந்தானம், தன்னுடைய 4 பெண் குழந்தைகளையும் கரையேற்ற... வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்கிறார். தான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நண்பன் பசுபதி அக்கவுண்டுக்கு அனுப்ப, அவர் பணத்தை சந்தானத்தின் குடும்பத்திடம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் ஒரு இடத்தை வாங்க சந்தானம் பணம் கேட்கும் போது தான்... என்னிடம் உன்னுடைய பணமே இல்லை என கை விரிக்கிறார் பசுபதி. நண்பனால் ஏமாற்றப்பட்டதை அறியும் சந்தானம் இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் உயிரையே விடுகிறார்.

நாக சைதன்யா - சோபிதா விருப்பம் போல் நடக்கும் திருமணத்தில் என்ன ஸ்பெஷல்? நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்!

38
Mahanadhi serial cast

Mahanadhi serial cast

இதனால் சந்தானம் தன்னுடைய மகளுக்கு ஏற்பாடு செய்த திருமணம் நின்று போக, தந்தை ஏமாற்றப்பட்ட தகவல் காவேரிக்கு தெரிய வருகிறது. தன்னுடைய தந்தை உயிர் போக காரணமாக இருந்த பசுபதியை எதிர்த்து நிற்கிறார். எப்படியே அவரிடம் இருந்து... காவேரி தன்னுடைய தந்தையின் பணத்தை ஓரளவு மீட்டு தங்கையின் இதய ஆபரேஷனுக்காக சென்னை புறப்பட்டு வருகிறார். ஆனால் அந்த பணம் குமரனின் கவன குறைவால் பறிபோகிறது.

48
Swaminathan Salary details

Swaminathan Salary details

இதை தொடர்ந்து காவேரி தங்கை வாழ்க்கைக்காக தன்னுடைய வாழ்க்கையையே பணயம் வைக்க துணிகிறார். சூழ்நிலையால் காவேரி விஜயை திருமணம் செய்ய நேர்கிறது. ஆனால் தொடர்ந்து பசுபதியால் காவேரியின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனை என்ன? என்பது உணர்வு பூர்வமாக கூறுகிறது இந்த தொடர். டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கை பிடித்து வரும் இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள், ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இடையே போன காதல் டிராக்; கட்டாக இதான் காரணம் - பிரபலம் கூறிய தகவல்!

58
Mahanadhi serial pair

Mahanadhi serial pair

அதன்படி, விஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் ஒரு நாளைக்கு ரூ.15,000 சம்பளமாக பெறுகிறார்.  அதை போல் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும் நடிகை லட்சுமி ப்ரியா, ரூ.10,000 பெறுகிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கமுருதீன் ஒரு நாளைக்கு ரூ.8000 வாங்குகிறார். 

68
Serial update

Serial update

கங்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் நடிகை தாரணி ஹெப்சிபா ரூ.6 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். யமுனாவாக நடித்து வரும் நடிகை ஆதிரை 5 ஆயிரம் பெறுகிறார். குழந்தை நட்சத்திரமாக நர்மதா கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவுக்கு ரூ. 2000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

நடிகை சீதா வீட்டில் திருட்டு; போலீசில் பரபரப்பு புகார்!

78
vijay tv serial

vijay tv serial

இரண்டாவது நாயகனாக நிவின் கதாபாத்திரத்தில் நடிக்கும், ருத்ரன் பிரவீன் ரூ.10,000 சம்பளமாக வாங்குகிறார். வில்லியாக ராகினி வேடத்தில் நடித்து வரும் நடிகை சகஸ்திகா ரூ. 7000 சம்பளமாக வாங்குகிறார்.  வில்லன் கதாபாத்திரத்தில் பசுபதியாக நடிக்கும் நடிகர் ரமேஷ் ரூ.6000 சம்பளமாக பெறுகிறார். தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சோமு ரூ. 8000 பெறுகிறார். பாட்டியாக கல்யாணி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.

88
Mahanadhi serial actors

Mahanadhi serial actors

அதே போல் அஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாஸ்கர் நடராஜன் ரூ.5000 பெறுகிறார். நடிகை சுஜாதா சிவகுமார் ரூ.7000 சம்பளமாக பெரும் நிலையில், இந்த சீரியலில் அதிக பட்சமாக  நடிகர் சரவணன் சில எபிசோடுகளில் மட்டுமே நடித்தாலும் அவர் ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 

என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved