MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை சீதா வீட்டில் திருட்டு; போலீசில் பரபரப்பு புகார்!

நடிகை சீதா வீட்டில் திருட்டு; போலீசில் பரபரப்பு புகார்!

நடிகை சீதா வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் நகை தொலைந்து போயுள்ளதாக, போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2024, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Seetha

Actress Seetha

தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 சவரன் நகை காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24
Actress Seetha Parthiban

Actress Seetha Parthiban

நடிகை சீதா, கணவர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின்னர் சீரியல் நடிகர்சதீஷை இரண்டாவதாக திருமணம் செய்து அவரிடம் இருந்தும் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள புஷ்பா காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

நயனை கரம்பிடித்த பின் கடகடவென உயர்ந்த விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு - அதுவும் இத்தனை கோடியா?

34
Seetha police Complaint

Seetha police Complaint

இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த 2 1/2 சவரன் ஜிமிக்கி மட்டும் காணாமல் போய் உள்ளதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மற்ற நகைகள் அனைத்தும் வீட்டில் இருக்கும் நிலையில் ஜிமிக்கி மட்டுமே காணாமல் போய் உள்ளதால் தனக்கு தெரிந்தவர்கள் அல்லது வீட்டில் வேலை செய்பவர்கள் யாரேனும் எடுத்திருப்பார்கள் என்கிற சந்தேகத்தில் சீதா இந்த புகாரை அளித்துள்ள நிலையில், போலீசார் நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

44
Jewel theft

Jewel theft

நடிகை சீதா சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பிரதர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். நடிகை சீதா சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அதே போல் இந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான, மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட், மற்றும் zee5 ஓடிடி தளத்தில் வெளியான தந்துவிட்டேன் என்னை என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்.. ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Recommended image2
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved