MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!

என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!

ஏ ஆர் ரகுமான் குறித்து அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாக அவரது மகன் அமீன் குமுறியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2024, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
AR Rahman

AR Rahman

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி, வெளியான பின்னர் அவர் பற்றி பரப்பப்படும் ஆதாரமற்ற அவதூறுகளும் அதிகரித்துவிட்டன. இப்படி பரப்பப்படும் தகவல்கள் வருத்தம் அளிப்பதாக, ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில், சில பிரபலங்கள் வெளியிடும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அறிவித்த தகவல்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
AR Rahman and Saira Banu Divorce

AR Rahman and Saira Banu Divorce

இந்த செய்தி வெளியான போது, வதந்தியாக இருக்கக்கூடும் என பலர் நினைத்த நிலையில்... பின்னர் சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனாவே இந்த தகவலை உறுதி செய்தார். பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்து தகவலை உறுதி செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு, பிரபலங்கள் சிலர் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில்... கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நெருங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் போது, ஒரு மருமகனையே எடுத்த பின்னர், ஏன் விவாகரத்து முடிவை எடுக்க வேண்டும்? என்கிற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மண்டையை உருட்டி கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இடையே போன காதல் டிராக்; கட்டாக இதான் காரணம் - பிரபலம் கூறிய தகவல்!

 

35
Mohini Dey Divorce

Mohini Dey Divorce

இதற்கு விளக்கம் கொடுக்கிறோம் என்கிற பெயரிலும், ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இது தான் காரணம் என்றும், சுய லாபத்திற்காக பல youtube சேனல்கள் வாயிக்கு வந்த கதையை எல்லாம் பேசி பல ஆதாரமற்ற தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பப்படும் தகவல்கள் ஒரு சாதனையாளராக பார்க்கப்படும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கும் விதத்தில் உள்ளன.

அதே போல் ஏ ஆர் ரகுமானிடம் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றி வந்த, மோகினி டேவும்... ஏ ஆர் ரகுமான் விவாகரத்தை அறிவித்த சில மணி நேரங்களில் தன்னுடைய விவாகரத்தை அறிவித்ததால், இருவரையும் இணைத்து பல செய்திகள் வெளியாகி வருகிறது. 

45
AR Rahman Divorce Controversy

AR Rahman Divorce Controversy

மேலும் வேலை நிமித்தமாக ஏ ஆர் ரகுமான் தன்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை காட்டாததும்... தன்னுடைய சவுண்ட் இன்ஜினியரையே மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் சாய்ராவுக்கு உடன்பாடு இல்லை, அப்போதே இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகி விட்டது இதுவும் இவர்கள் பிரிவுக்கு ஒரு காரணமாக இருக்க கூடும் என சிலர் கூறி வந்தனர்.

எந்தவித ஆதாரமும் இன்றி, இப்படி பல தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில்... ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், தன்னுடைய குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

நடிகை சீதா வீட்டில் திருட்டு; போலீசில் பரபரப்பு புகார்!

55
AR Ameen Emotional Post

AR Ameen Emotional Post

இது குறித்து அமீன் போட்டுள்ள பதிவில், " என் தந்தை ஒரு சாதனையாளர், இசை துறைக்கு அவர் அளித்த  பங்களிப்புகளுக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளராகவே பார்க்க படுகிறார். அவர் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை  பரப்புவதை தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்  என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved