விஜய் தேவரகொண்டாவை கரம்பிடித்தபடி போட்டோ வெளியிட்டு... நடிகை சமந்தா சொன்ன குட் நியூஸ் - வாழ்த்தும் ரசிகர்கள்
விஜய் தேவரகொண்டாவை கரம்பிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா, தற்போது அதிலிருந்து குணமாகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். தற்போது அவர் நடித்துள்ள சாகுந்தலம் என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆக உள்ளது. சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகரன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர குஷி என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் சமந்தா. ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... 2-வது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா விஷ்ணு விஷால்..? லால் சலாம் நாயகனின் டுவிட்டால் குழம்பிபோன ரசிகர்கள்
இப்படத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இடையே நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியாக சூழ்நிலை ஏற்பட்டதால், படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். தற்போது ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால், குஷி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை சமந்தா கரம்பிடித்தபடி புகைப்படம் இடம்பெற்று உள்ளது. தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். குஷி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கட்டுள்ள நிலையில், அப்படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஜான்வி கபூர் - ஜூனியர் NTR நடிக்கும் படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த ராஜமௌலி! வைரலாகும் போட்டோஸ்!