MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜான்வி கபூர் - ஜூனியர் NTR நடிக்கும் படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த ராஜமௌலி! வைரலாகும் போட்டோஸ்!

ஜான்வி கபூர் - ஜூனியர் NTR நடிக்கும் படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த ராஜமௌலி! வைரலாகும் போட்டோஸ்!

சமீபத்தில் ஆர் ஆர் ஆர் பட நாயகன், ஜூனியர் என்டிஆர் தன்னுடைய 30 ஆவது படத்தை கொரடலா சிவா இயக்க உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 23 2023, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான தேசப்பற்று திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. இப்படத்தில் கொமரம் பீம் என்கிற சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருந்தவர் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடனமாடிய பாடலான 'நாட்டு நாட்டு' பாடல் உலக அளவில் பிரபலமாகியது. மேலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆஸ்கர் விருதையும் பெற்றது.

28

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் இந்த விருதினை, இப்படத்தின் இசையமைப்பாளரான கீரவாணி மற்றும் பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுமார் 14 வருடங்களுக்கு பின் ஏ.ஆர்.ரகுமானுக்கு பின்னர் இந்த விருதினை பெற்றிருந்தார் கீரவாணி. அதே நேரம் தென்னிந்திய மொழி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் தென்னிந்திய திரையுலகமே இந்த வெற்றியை கொண்டாடியது.

சைடு போஸில் சாச்சிட்டாலே.. கேரள புடவையில்... சும்மா கும்முனு போஸ் கொடுத்து கிக் ஏற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

38

'ஆர் ஆர் ஆர்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய 30-வது படத்தை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியானது. இப்படத்தில் ஜூனியர் என் டி-ஆருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூர் நடிக்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

48

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று மிகவும் விமர்சையாக நடைபெற்ற நிலையில்... இதில் பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.

கணவருக்காக மதம் மாறினாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை.. 'லவ் ஜிகாத்' உண்மை என்ன?

58

மேலும் ஜூனியர் என்டிஆர்-யின் 31 வது படத்தை இயக்க உள்ள, கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

68

அதுமட்டுமின்றி இயக்குனர் கொரடலா சிவா, ஜூனியர் என்டிஆரின்  30-வது படத்தின் மூலம் டோலிவுட்  கோலிவுட் திரை உலகின் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ள அனிருத், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Meena: தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த மீனா! இது தான் எனக்கு ரொம்ப முக்கியம்!

78

தற்போது இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் பூஜையில் நடிகை ஜான்வி கபூர் பச்சை நிற பட்டுப் புடவையில், அதற்கு மேட்சிங் ஆக ஸ்லீவ் பிளஸ் ஜாக்கெட் அணிந்து ஜிமிக்கி கம்மலுடன் பேரழகியாக வந்திருந்தார்.

88

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. ஆர் ஆர் ஆர் படத்திற்கு பின்னர், உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜூனியர் என் டி ஆர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Bakasuran OTT: செல்வராகவன் நடிப்பில் பட்டையை கிளப்பிய கிரைம் திரில்லர்... 'பகாசுரன்' ஓடிடி ரிலீஸ் தேதி இதோ.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved